திருக்காட்டுப்பள்ளியில் சிபிஎம் கட்சியில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
17 Nov 2025, 3:10 pm
<p><strong>திருக்காட்டுப்பள்ளியில் சிபிஎம் கட்சியில் இணைந்த மாற்றுக் கட்சியினர்</strong></p>
<p>தஞ்சாவூர், நவ.17- தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வடக்கு ஒன்றியம், திருக்காட்டுப்பள்ளி கரிகாலன் திருமண மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 25க்கும் மேற்பட்டோர் தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டனர். பூதலூர் எம். வசந்த் தலைமையில், ஒன்பத்துவேலி சசிகுமார், ராஜா, மஞ்சுளா, நந்தினி, கவிதா என 10 பெண்கள் உட்பட மொத்தம் 25 பேர், வேறு கட்சிகளில் இருந்து விலகி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.அபிமன்னன், பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் பி.முருகேசன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வழக்கறி ஞர் சேகர், பாலச்சந்தர், வெங்கடேசன், திருஞான சம்பந்தம் மற்றும் கட்சியின் கிளைச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.</p>
