தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மருத்துவ உதவி நிதியை தொடர்ந்து வழங்கிடுக

8 Oct 2026, 2:21 am
மருத்துவ உதவி நிதியை தொடர்ந்து வழங்கிடுக

மருத்துவ உதவி நிதியை தொடர்ந்து வழங்கிடுக

கோவை, அக்.7-நிறுத்தப்பட்ட மருத்துவ உதவி நிதியை தொடர்ந்து வழங்கக்கோரி, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படியாக மாதம் ரூ.1,000 வழங்கி வந்ததை, பிஎஸ்என்எல் நிர்வாகம் திடீரென நிறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையை கண்டித்தும், ஓய்வூதியர்களின் மருத்துவப்படியை ரத்து செய்த நிர்வாக உத்தரவை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தியும், மாநிலம் முழுவதும் பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்கம் உள்ளிட்ட பிஎஸ்என்எல்ஓய்வூதியர் சங்கத்தினர் இணைந்து புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்ஒருபகுதியாக கோவை மத்திய தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சி.ராஜேந்திரன்,ராபர்ட், பழனிச்சாமி செந்தூர்பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வெங்கட்ராமன், ஏ.குடியரசு, சுப்புராயன், தனுஷ்கோடி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இதேபோன்று, பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்புநடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்க மாநில உதவித்தலைவர் நிஷார் அகமது, மாவட்ட அமைப்பு செயலாளர் கே.நடராஜன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைச் செயலாளர் மதன்குமார், என்எப்டிஎப் கபிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஈரோடு

ஈரோடு பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஏஐபிடிபிஏ மாவட்டத் தலைவர் பி.சின்னசாமி தலைமை வகித்தார். சிஜிபிடபிள்யுஏ எஸ்.மகாலிங்கம், பிஎஸ்என்எல்பிஏ பி.தங்கராஜ், ராஜமாணிக்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். திரளானோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக, எப்சிபிஏ கன்வீனர் சி.பரமசிவம் நன்றி கூறினார்.

திருப்பூர்

திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க வடக்கு கிளைத் தலைவர் எம்.அண்ணாதுரை தலைமை ஏற்றார். வடக்குக் கிளைச் செயலாளர் கே.விஸ்வநாதன், தெற்கு கிளைத் தலைவர் பழனிவேல்சாமி, பிஎஸ்என்எல் ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியம், பல்லடம் செயலாளர் ஏ.ஜெயராஜ், அவிநாசி செயலாளர் கே.கணேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். முடிவில், மகளிர் பிரிவுசெயலாளர் ஆர்.லலிதா நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.