தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னையில் 354 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த ஒதுக்கீடு

22 Mar 2026, 4:19 pm
சென்னையில் 354 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த ஒதுக்கீடு
<p><strong>சென்னையில் 354 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த ஒதுக்கீடு</strong></p> <p>சென்னை, மார்ச் 22- சென்னையில் பொதுக்கூட்டங்கள் நடத்த 140 இடங்களையும், தெருமுனைப் பிரச்சாரங்களுக்காக 214 இடங்களையும் அடையாளம் கண்டு ஒதுக்கியுள்ளனர். போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவும், அமைதியைப் பராமரிக்கவும் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய ஏதுவாக, அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் தாங்கள் உத்தேசித்துள்ள கூட்டத்தின் இடம் மற்றும் நேரம் குறித்து முன்கூட்டியே உள்ளூர் காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மூத்த காவல்துறை அதி காரி கூறுகையில், &ldquo;சென்னை மாவட்டக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 112 பொதுக்கூட்ட இடங்களும், 179 தெருமுனைப் பிரச்சார இடங்களும் குறிக்கப்பட்டுள்ளன. இதற்கான அனு மதியைப் பெற இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள &lsquo;சுவிதா 2.0&rsquo; என்ற செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்,&rdquo; என்றார். இந்தச் செயலி மூலம் விண்ணப்பித்தவு டன், தேர்தல் நடத்தும் அலுவலர் அதனைச் சம்பந்தப்பட்ட துணை ஆணையருக்கு அனுப்பி வைப்பார். பின்னர், அந்தந்தப் பகுதி காவல் ஆய்வாளர்கள் இடத்தை நேரில் ஆய்வு செய்து தடையின்மைச் சான்றிதழ் வழங்குவார்கள். &lsquo;முதலில் வரு பவருக்கே முன்னுரிமை&rsquo; என்ற அடிப்படை யில் இந்த அனுமதி வழங்கப்படும். மேலும், வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனு நிலை மற்றும் அனுமதி குறித்த விவ ரங்களையும் இந்தச் செயலியிலேயே சரிபார்த்துக் கொள்ளலாம். ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த உரிய அதிகாரிகளிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். கூட்டங்களில் இடையூறு செய்பவர்கள் மீது அமைப்பாளர்கள் நேரடி யாக நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை யின் உதவியை நாட வேண்டும். ஒரு கட்சியின் பிரச்சாரத்தையோ அல்லது சுவ ரொட்டிகளையோ மற்றொரு கட்சியினர் சேதப்படுத்தக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.