குவாமாபட்டியில் செயல் வீரர்கள் கூட்டம்
10 Apr 2026, 5:30 am

குவாமாபட்டியில் செயல் வீரர்கள் கூட்டம்

திருவில்லிபுத்தூர், ஏப்.9- திருவில்லிபுத்தூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குவாமாபட்டி பகுதியில் சிபிஐ வேட்பாளர் மாலிங்கம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதனொட்டி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் வகையில், குவாமாபட்டியில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

எஸ்.சூரியகுமார் பேரூராட்சி செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். சிபிஐ வேட்பாளர் மாலிங்கம் ஆதரவு கேட்டு பேசினார். திமுக திருவில்லிபுத்தூர் ஒன்றியச் செயலாளர் மல்லி ஆறுமுகம் பேசினார். சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் ராமசாமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், விசிக சட்டமன்றத் தொகுதி செயலாளர் ஸ்ரீதர், திமுக ஒன்றியச் செயலாளர் முனியாண்டி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அதேபோல், சிபிஐ வேட்பாளர் மாலிங்கத்தை வெற்றி பெற வைக்க சுந்தரபாண்டியன் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம், வேட்பாளர் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. திமுக பேரூர் கழகச் செயலாளர் சிட்டிபாபு தலைமை தாங்கினார். களப் பணி குறித்து பி.முத்துராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர் ராமசாமி பேசினார்.