திருவிதாங்கோடு பேரூராட்சியில் கூட்டணிக் கட்சியினர் வாக்குச் சேகரிப்பு
12 Apr 2026, 5:30 am
<p><strong>திருவிதாங்கோடு பேரூராட்சியில் கூட்டணிக் கட்சியினர் வாக்குச் சேகரிப்பு</strong></p><p>நாகர்கோவில், ஏப்.11- மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு ஆதரவாக திருவிதாங்கோடு பேரூராட்சியில் கூட்டணிக்கட்சிகளின் சார்பாக வீடு வீடாக வாக்குச் சேகரிப்பு நடைபெற்றது. திருவிதாங்கோடு பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் ஆகியோர் பெரும் வரவேற்பு அளித்தனர்.</p><p>திருவிதாங்கோடு பேரூராட்சி மன்ற தலைவரும் திமுக செயலாளருமான ஹாரூன் ரசீது மணித்தீவு மக்கள் கட்சியின் சித்திக், எஸ்.டி.பி.ஐ செய்யதுஅலி, தேமுதிக அனிஸ், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பிரமுகமது, விக்னேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜன், கு. ரவீந்திரன் ஷாஜகான், கங்காதரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
