தேர்தலில் மத அடையாளங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு
2 Apr 2026, 5:30 am

தேர்தலில் மத அடையாளங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு

திருச்சூர் மக்களவைத் தேர்தலில் மத அடையாளங்களைப் பயன்படுத்தியதாக சுரேஷ் கோபி மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை அவர் எதிர்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுரேஷ் கோபி தனது பிரச்சாரத்தின் போது மதச் சின்னங்களைப் பயன்படுத்தி வாக்காளர்களைத் திசைதிருப்ப முயன்றதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஏ.எஸ்.பினோய் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி சுரேஷ் கோபி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.