அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!
10 Apr 2026, 1:33 pm
<p>அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்.</p><p>தில்லியில் கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக பணம் கண்டெடுக்கப்பட்டது. இது நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். </p><p>இதை தொடர்ந்து, அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி 146 எம்பிக்கள் கையெழுத்திட்ட தீர்மானம் மக்களவையில் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தை ஏற்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா, கர்நாடக உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் பி.வி.ஆச்சார்யா ஆகியோர் அடங்கிய மூவர் குழுவை நியமித்தார். தற்போது, விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார்.</p><p>நீதிபதி ஒருவர் பதவிநீக்கம் செய்யப்படுவதற்கு முன்னதாகவே அவராக முன்வந்து ராஜினாமா செய்யும் பட்சத்தில், அவருக்கு ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்றிருக்கும் நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா தனது ராஜினாமா கடிதம் வழங்கியுள்ளார்.</p>
