முந்தய பக்கம்

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா

11 Apr 2026, 5:30 am
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா

கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் விவகாரம். புதுதில்லி: கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக யஷ்வந்த் வர்மா பணியாற்றிய போது, அவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அவர் வீட்டில் இல்லை. எனினும் தீயை அணைக்கச் சென்ற தீயணைப்புத் துறையினர் வீட்டில் உள்ள ஒரு அறையில் பல மூட்டைகளில் கட்டுக்கட்டாக பணம் எரிந்து சாம்பலாகிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த விவகாரம் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிபதி யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், மிகுந்த மனவேதனையுடன் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பதவியிலிருந்து உடனடியாக விலகும் வகையில் எனது ராஜினாமாவைச் சமர்ப்பிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram