தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை குடிநீர் வாரிய ஊழியர், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்க வேண்டும் அனைத்து சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

5 Jan 2026, 6:21 pm
சென்னை குடிநீர் வாரிய ஊழியர், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்க வேண்டும் அனைத்து சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
<p><strong>சென்னை குடிநீர் வாரிய ஊழியர், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்க வேண்டும் அனைத்து சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்</strong></p> <p>சென்னை, ஜன, 5 - அகவிலைப்படி உயர்வை விரைந்து வழங்க வலியுறுத்தி திங்களன்று (ஜன.5) சென்னை குடிநீர் வாரிய அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு அறிவித்த அகவிலைப்படி உயர்வை பிற வாரியங்கள் வழங்கியுள்ள நிலையில், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் மட்டும் வழங்கப்படாமல் உள்ளது. அகவிலைப்படி உயர்வை வழங்க ஒப்புதல் வழங்கப்படாத நிலை உள்ளது. எனவே, விரைந்து வழங்க வேண்டும். வாரியத்தில் ஆறு மாதமாக நிரப்பப்படாமல் உள்ள அரசு மருத்துவர் பணியிடத்தை விரைந்து நிரப்ப வேண்டும். மருத்துவ காப்பீட்டிற்காக ஆண்டு தோறும் வாரியம் ரூ.6 கோடி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு செலுத்துகிறது. இருப்பினும், காப்பீட்டு பணத்தை சரியாக வழங்குவதில்லை; சிகிச்சை பெற உரிய அனுமதியும் கிடைப்பதில்லை. இதனை சரி செய்ய வேண்டும். பணியாளர்களுக்குப் பதவி உயர்வு வழங்குவதில் காலதாமதம் ஏற்படு வதை சரி செய்ய வேண்டும், களப்பணி யாளர்களுக்கு கிரேடு 1, கிரேடு 2 என பதவி உயர்வு வழங்க வேண்டும். கல்வித் தகுதி அடிப்படையில் அலுவலக உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. சென்னை குடிநீர் பணியாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் சி.ஆர்.ராஜன், சென்னை குடிநீர் வாரிய ஓய்வூதியர்கள் சங்க தலைவர் நா.பரமசந்திரன், &nbsp;தணிகை அரசு, விஜயா, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் எம்.பழனி மற்றும் தயாளன் உள்ளிட்டோர் பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.