அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
19 May 2026, 11:45 pm

அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மே 19- ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திருப்பூரில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

எரிபொருட்கள் விலையை உயர்த்திய ஒன்றிய மோடி அரசை கண்டித்து, திருப்பூ ரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எல்.பி.எப். மாவட்டத் தலைவர் மணி தலைமை ஏற் றார்.

இதில், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செய லாளர் பி.ஆர்.நடராஜன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ், ஐஎன்டியுசி மாவட் டப் பொறுப்பாளர் காஜா, எச்எம்எஸ் மாவட்டத் தலைவர் அப்புக்குட்டி, யூடியூசி மாவட்டச் செயலாளர் சதீஷ் சங்கர் உள்ளிட் டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் எரிபொருள் விலையேற்றத்தின் பாதிப்பைக் குறிக்கும் விதத்தில் நூதனமான முறையில் இருசக்கர வாகனத்தை பாடையில் கிடத்தியும், எரி வாயு சிலிண்டரை முன்னால் வைத்தும் மாலை அணிவித்திருந்தனர்.