முந்தய பக்கம்

தேன்கனிக்கோட்டை தபால் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் மறியல்

12 Feb 2026, 4:57 pm
தேன்கனிக்கோட்டை தபால் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் மறியல்
<p><strong>தேன்கனிக்கோட்டை தபால் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் மறியல்</strong></p> <p>கிருஷ்ணகிரி பிப்.12 - ஒன்றிய அரசின் தொழிலாளர்கள், விவ சாயிகள் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், வாலிபர் சங்கம், சிபிஎம் தளி, கெலமங்கலம் ஒன்றிய குழுக்கள் சார்பில் தேன்கனிக்கோட்டை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் அனுமப்பா, மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் ராஜா தலைமை தாங்கினர்.வாலிபர் சங்க மாவட்ட தலைவர் நஞ்சா ரெட்டி, ஒன்றிய பொருளாளர் அருண்குமார் சிபிஎம் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.சேகர், சி.பி.ஜெய ராமன், ஆர்.நடராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் இருதயராஜ்,சீனிவாசன், டி.எஸ். பாண்டியன்,வி.சி.க தளி ஒன்றிய செயலாளர் ரவி கலந்து கொண்டனர். 75 பெண்கள் உள்ளிட்ட 200 பேர் கைதாகினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram