முந்தய பக்கம்

பாலர் பூங்கா நன்மை இருக்கு!

15 Nov 2025, 1:19 pm
பாலர் பூங்கா   நன்மை இருக்கு!
<p><strong>பாலர் பூங்கா</strong></p> <p>குருவி யெல்லாம் பறக்கும்!-மனம் கூட சிறகு அடிக்கும்! அருவி யெல்லாம் குதிக்கும்-மனம் அதிலே வீழ்ந்து குளிக்கும். &nbsp;பசுவும் கன்றை நக்கும்!-கன்று பாலை முட்டிக் குடிக்கும்! பசுவும் நமக்குத் தாயாம்-விரும்பிப் பாலை நமக்குக் கொடுக்கும் &nbsp;மரத்தின் கனிகள் இனிக்கும்-அருள் மாந்தர் சொல்லும் இனிக்கும் நிறங்கள் பலவாய் இருக்கும்-சோலை நின்று பாரு மணக்கும். &nbsp;வான வில்லைப் பாரு-அதன் வண்ணம் வேறு வேறு. வான வில்லின் நிறங்கள் -எண்ணி வந்து நீயும் கூறு. &nbsp;தேனீ பூவை நாடும் !-அதில் தேங்கும் தேனைத் தேடும். நீயும் நூல்கள் நாடு!-அதில் நிறைந்த அறிவைத் தேடு. &nbsp;காணும் காட்சி தன்னில் -நாமும் கற்கும் பாடம் இருக்கு. &nbsp;தேனாய் இனிக்கும் பாப்பா-இதைத் தெளிந்தால் நன்மை இருக்கு.</p>
Share
FacebookXWhatsAppTelegram