அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார்!
29 Nov 2025, 4:58 pm
<p><strong>அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார்!</strong></p>
<p>அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி சென்னை, நவ. 29 - ‘டிட்வா’ புயல் தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டிருப்பதாக மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: டிட்வா புயல், இராமநாதபுரத்தில் இருந்து கடற் கரையை ஒட்டியே நகர்ந்து சென்னை வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சென்னைக்குள் வருகிறதா அல்லது வெளியே செல்கிறதா என்பதை வானிலை ஆய்வு மையம் இன்னும் தெளிவாக கூறவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் 6 ஆயிரத்திற் கும் அதிகமான நிவாரண முகாம்கள் தயார் நிலை யில் உள்ளன. 28 பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் உள்ளதுடன், மேலும் 10 குழுக்கள் பிற மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் வரவழைக் கப்படவுள்ளன. விமானப்படை மற்றும் கடலோரக் காவல் படையும் தயார் நிலையில் உள்ளன. உயிரிழப்பு இல்லை இதுவரை எந்த உயிரிழப்பும் இல்லை. 16 கால்நடைகள் இறந்துள்ளன. 24 குடிசைகள் சேத மடைந்துள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புயல் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். ஒன்றரை கோடி பேருக்கு புயல் முன்னெச்சரிக்கை குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. கடற்கரையோ ரம் யாரும் செல்ல வேண்டாம் என பொதுமக்க ளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தயார் நிலையில் மின்வாரியம் புயல் காரணமாக ஏற்படும் கனமழையை எதிர் கொள்ள மின்வாரியம் முழு தயார் நிலையில் உள்ளதாக மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்தார். மழையால் ஏற்படும் மின் பாதிப்புகள் குறித்த பிரச்சனைகளை 94987 94987 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. மின்கம்பி தொங்கிக் கொண்டிருந்தால் உடனடியாக மின்வாரியத்துக்கு தகவல் தெரி விக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அவசர காலத்தில் மறுசீரமைப்பு பணிகளை செய்ய 99 வாக்கி டாக்கி கருவிகள் களப் பொறி யாளர்களுக்கு தரப்பட்டுள்ளன. சென்னை மாநக ராட்சியில் இருந்து பெறப்பட்ட 50 வாக்கி டாக்கி கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 3.3 லட்சம் மின் கம்பங்கள், 9,568 கிலோமீட்டர் மின் கம்பிகள், 13,029 மின் மாற்றிகள் இருப்பில் உள்ளன. ஜே.சி.பி., கிரேன்கள் உள்ளிட்ட கனரக இயந்திரங்களை வாடகை அடிப்படையில் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மரம் வெட்டும் உபகரணங்கள் மற்றும் பிற கரு விகள் பயன்பாட்டு நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. சென்னையில் உள்ள ஐந்து மின் பகிர்மான வட்டங்களில் தலா 200 களப் பணியாளர் கள் தயார் நிலையில் உள்ளனர். ஆயிரம் களப் பணி யாளர்களுடன் 750 ஒப்பந்த தொழிலாளர்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மக்க ளின் குறைகளை தீர்க்கும் வகையில் 24 மணி நேரமும் மின்னகம் சேவை மையம் செயல்பாட் டில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். புதுச்சேரியில் இரவுப் பணி ரத்து டிட்வா புயல் எதிரொலியாக புதுச்சேரியில் உள்ள அனைத்து தொழிற்சாலை பணியாளர் களுக்கும் இரவுப் பணி ரத்து செய்யப்படுகிறது என புதுச்சேரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.</p>
<p> </p>
