தேனியில் 5 இடங்களில் அனைத்து ஓய்வூதியர் ஆர்ப்பாட்ட
27 Jan 2026, 3:28 pm
<p><strong>தேனியில் 5 இடங்களில் அனைத்து ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம் </strong> </p>
<p>தேனி, ஜன.27- தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தேனி நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தேனி கிளை தலைவர் ஆர்.ராமச்சந்தி ரன் தலைமை வகித்தார். ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வட்டார தலைவர் ஆர்.சடையாண்டி, பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்டார தலைவர் பழனியப்பன், பாளையத்தில் சார் நிலை கரு வூலம் முன்பு வட்டார தலைவர் ஆர்.கருணாநிதி தலை மையிலும், போடி நகராட்சி அலுவலகம் முன்பு வட்டார தலைவர் கே.கோபாலகிருஷ்ணன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டங்களில் மாநில துணைத் தலைவர் பா. ராமமூர்த்தி, மாவட்ட தலைவர் ஏ.பி.முருகேசன், மாவட்டச் செயலாளர் எஸ்.சிவமணி, மாவட்ட நிர்வாகிகள் எத்தி ராஜ், எஸ்.ஜானகி, எஸ்.கண்ணன், கே.துரைராஜ் உள் ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்.</p>
