முந்தய பக்கம்

தோழர் நல்லக்கண்ணு மறைவு அனைத்துக்கட்சியினர் ஊர்வலம்

27 Feb 2026, 5:32 pm
தோழர் நல்லக்கண்ணு மறைவு அனைத்துக்கட்சியினர் ஊர்வலம்
<p><strong>தோழர் நல்லக்கண்ணு மறைவு அனைத்துக்கட்சியினர் ஊர்வலம்</strong></p> <p>உடுமலை, பிப்.27- விடுதலை போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் முதுபெரும் தலைவருமான தோழர்.ஆர். நல்ல கண்ணு புதனன்று காலமானார். இவரின் தியாகத்தை போற்றும் வகையில் இந்திய &nbsp;கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பி ரமணியம் தலைமையில் வெள்ளியன்று உடுமலையில் அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற அமைதி ஊர்வலம் நடை பெற்றது. உடுமலை மத்திய பேருந்து நிலையத்தின் முன்பு &nbsp;இருந்து துவங்கி, நிறைவாக உடுமலை நகராட்சி அலுவல கத்தின் முன்பாக புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இக்கூட் டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர்.மதுசூதணன், கி.கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் பஞ்சலிங்கம், சிபிஐ ஒன்றியச் &nbsp;செயலாளர் கிருஷ்ணசாமி, காங்கிரஸ் கட்சியின் கோவிந்த ராஜ், ரவி, யூசிபிஐ சார்பில் மூர்த்தி, சிபிஐ(எம்எல்) மீனாட்சி சுந்தரம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விடுதலைமணி, தேமுதிக சார்பில் ராமசந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் தமிழரசன், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் அருள் செல்வன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram