முந்தய பக்கம்

நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம்!

25 Jan 2026, 7:58 am
நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம்!
<p>2026&ndash;27 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு, ஜனவரி 27ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.<br /> இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை இரண்டு அமர்வுகளாக நடத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.<br /> முதல்கட்ட அமர்வு ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெறும். இதனைத் தொடர்ந்து, இரண்டாம் அமர்வு மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடைபெறும்.<br /> இந்த கூட்டத்தொடரில் ஒன்றிய பட்ஜெட் தாக்கல், முக்கிய சட்டமசோதாக்கள் குறித்து விவாதம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram