தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒரு வாரத்திற்குள் கூலி ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்க அனைத்து பாத்திர தொழிலாளர் சங்கங்கள் வலியுறுத்தல்

23 Dec 2025, 4:05 pm
ஒரு வாரத்திற்குள் கூலி ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்க அனைத்து பாத்திர தொழிலாளர் சங்கங்கள் வலியுறுத்தல்
<p><strong>ஒரு வாரத்திற்குள் கூலி ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவங்க அனைத்து பாத்திர தொழிலாளர் சங்கங்கள் வலியுறுத்தல்</strong></p> <p>திருப்பூர், டிச.23- பாத்திர தொழிலா ளர்களின் கூலி ஒப்பந்தம் முடி வடைவதால், ஒரு வாரத்திற் குள் கூலி ஒப்பந்த பேச்சு வார்த்தையை துவங்கக் கோரி பாத்திர உற்பத்தியா ளர்களுக்கு கடிதம் அனுப்பு வது என அனைத்து பாத்திர &nbsp;தொழிலாளர் சங்கங்களின் கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டது. திருப்பூர் மாவட்டம் அனைத்து பாத்திர தொழிலாளர் சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம் திங்களன்று அனுப்பர்பாளையம் எல். பி.எப். அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த &nbsp;கூட்டத்திற்கு ஐஎன்டியுசி பாத்திர தொழிற் சங்க செயலாளர் வி.ஆர்.ஈஸ்வரன் தலைமை &nbsp;வகித்தார். இதில், சிஐடியு சார்பில் கே.குப்பு சாமி, குபேந்திரன், ஏஐடியுசி எஸ்.செல்வ ராஜ், பி.நாகராஜ், எடிபி சார்பில் குணசேக ரன், விஜயஜ்குமார், எல்.பி.எப். சார்பில் &nbsp;மு.ரத்தினசாமி, வேலுசாமி, காமாட்சியம் மன் பாத்திர தொழிலாளர் சங்கம் சார்பில் ஆறுமுகசாமி, எஸ்.பி. அர்ஜூனன், ஐஎன்டி யுசி சார்பில் அசோக், எச்.எம்.எஸ். சார்பில் பாண்டியன், பி.எம்.எஸ். சீனிவாசன், நாராய ணன் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், பாத்திர தொழிலாளர்க ளின் கூலி ஒப்பந்தம் டிச.31 ஆம் தேதி யுடன் முடிவடைகிறது. எனவே பாத்திரப் &nbsp;பட்டறைகளில் வேலை செய்யும் தொழிலா ளர்களுக்கு எவர்சில்வர் தொழிலாளர்க ளுக்கு 50 சதவீதம், பித்தளை, தாமிரம் பாத்தி ரத் தொழிலாளர்களுக்கு 60 சதவீதம், ஈயம் &nbsp;பூச்சுத் தொழிலாளர்களுக்கு 70 சதவீதம் கூலி &nbsp;உயர்வு வழங்க வேண்டும் என முடிவு எடுக் கப்பட்டது. &nbsp;மேலும் இது தொடர்பாக பாத்திர உற்பத்தி யாளர்களுக்கு கடிதம் அனுப்புவது, உடனடி யாக கூலி ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் என வலியுறுத்த முடிவு செய்யப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.