ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து உளுந்தூர்பேட்டையில் அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
12 Feb 2026, 4:57 pm
<p><strong>ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து உளுந்தூர்பேட்டையில் அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>கள்ளக்குறிச்சி, பிப்.12 - உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் .ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் பாஜக அரசை கண்டித்து மதச்சார்பற்ற போக்கு கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில் உளுந்தூர்பேட்டையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக நகரச் செயலாளர் டேனியல் ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பா ட்டத்தில், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜே.மணிக்கண்ணன், உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு,ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர்,மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.கே.பூவராகவன், விசிக தொகுதி செயலாளர் சேகா.சேரன், மதிமுக மாவட்ட செயலாளர் க.ஜெய்சங்கர், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் சீனி வாசன்,வட்டாரத் தலைவர் பெரியசாமி, சிபிஐ மாவட்டக் குழு வெங்கடேசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் ராஜேஷ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளைச் சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு மக்கள் விரோத பாஜக அரசு கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.</p>
