தோழர் ஆர்.நல்லகண்ணு மறைவு விருதுநகர் மாவட்டத்தில் அனைத்துக் கட்சியினர் அஞ்சலி
27 Feb 2026, 5:32 pm
<p><strong>தோழர் ஆர்.நல்லகண்ணு மறைவு விருதுநகர் மாவட்டத்தில் அனைத்துக் கட்சியினர் அஞ்சலி</strong></p>
<p>விருதுநகர், பிப்.27- விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான தோழர் ஆர்.நல்லகண்ணு மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர். விருதுநகரில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் அ.குருசாமி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, நகர்மன்ற தலைவர் ஆர்.மாதவன், மநீம கட்சியின் மாவட்டசெயலாளர் காளிதாஸ், விசிக மண்டல நிர்வாகி சக்திவேல், மதிமுக சார்பில் லட்சுமணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சிவகாசி உட்பட பல்வேறு பகுதிகளில் இரங்கல் கூட்டங்கள் நடைபெற்றன.</p>
