தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிசானத்தூரில் உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமையாது என அரசு உத்தரவாதம் அளிக்க அனைத்துக் கட்சி வலியுறுத்தல்

29 Nov 2025, 1:28 pm
பிசானத்தூரில் உயிரி மருத்துவக் கழிவு  ஆலை அமையாது என அரசு உத்தரவாதம் அளிக்க அனைத்துக் கட்சி வலியுறுத்தல்
<p><strong>பிசானத்தூரில் உயிரி மருத்துவக் கழிவு &nbsp;ஆலை அமையாது என அரசு உத்தரவாதம் அளிக்க அனைத்துக் கட்சி வலியுறுத்தல்</strong></p> <p>புதுக்கோட்டை, நவ. 29- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை தாலுகா, பிசானத்தூரில் உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமையாது எனத் தமிழக அரசு உடனடியாக உத்தரவாதம் அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோ சனைக் கூட்டத்தில் வலியுறுத்தப் பட்டது. கந்தர்வகோட்டையில் இடதுசாரிக் கட்சிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராமை யன், த.அன்பழகன், மாவட்டக்குழு உறுப்பினர் வி.ரெத்தினவேல், ஒன்றிய செயலாளர் ஜி.பன்னீர்செல் வம், &nbsp;சிபிஐ சார்பில் உ.அரசப்பன், சிபிஐ(எம்.எல்) கட்சியின் சார்பில் வீ.மு.வளத்தான், ஒன்றிய செயலா ளர் க.சோதிவேல், விசிக சார்பில் விடுதலை வளவன், வடக்கு ஒன்றியச் செயலாளர் வெள்ளைச்சாமி, மதிமுக ஒன்றியச் செயலாளர் வைரமூர்த்தி, சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் சித்திரவேல், முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் கலியபெருமாள் உள் ளிட்டோர் பங்கேற்றனர். தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முக்கிய அம்சங்கள்: உயிரி மருத்துவக் கழிவு ஆலை க்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் 35 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர். மக்கள் வாக்கா ளர் சிறப்பு தீவிர திருத்தப் (SIR) படிவத்தைப் புறக்கணித்து போ ராட்டத்தின் தீவிரத்தை வெளிப் படுத்தி உள்ளனர். &nbsp;எம்.சின்னதுரை எம்எல்ஏ., தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு &nbsp;கடிதம் அனுப்பியும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரி டம் கோரிக்கை மனுவை அளித்தும் வலியுறுத்திய பிறகும், ஆலை அமைக்கப்படாது என்ற அரசு உத்தர வாதம் கிடைக்காததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, ஆலை அமைக்க ஊராட்சி மன்றத் தலைவர், வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் அளித்த அனுமதியையும், தடையில்லாச் சான்றையும் உடனடி யாக ரத்து செய்ய வேண்டும். பிசா னத்தூரில் ஆலை அமைக்கப்பட மாட்டாது என்ற உத்தரவாதத்தை, அரசு சார்பில் உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.