அஞ்சல்துறை சார்பில் அகில இந்திய பளு தூக்குதல் போட்டி
23 Jan 2026, 5:49 pm
<p><strong>அஞ்சல்துறை சார்பில் அகில இந்திய பளு தூக்குதல் போட்டி</strong></p>
<p>சென்னை, ஜன.23 இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தின் சார்பில் பளு தூக்குதல், வலு தூக்குதல் மற்றும் ஆணழகன் போட்டிகள் சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளை யாட்டரங்கில் ஜன.27-ம் தேதி தொடங்குகிறது. இப்போட்டிகளை தமிழ்நாடு அஞ்சல் வட்டத் தலைமை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ் தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சி யில் ஒலிம்பிக் பளு தூக்குதல் சாம்பி யன் சிவராஜ் கவுரவ விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். இந்த போட்டியில் நாடு முழுவதி லும் இருந்து 16 மாநிலங்களைச் சேர்ந்த 166 வீரரர்கள் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் ஒன்றிய அரசின் துறைகளுக்கிடை யேயான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள் ஆணழகனாக வெற்றி பெறுபவருக்கு பரிசுடன் “தாக் ஸ்ரீ” பட்ட மும் வழங்கப்படும்.</p>
<p> </p>
