அகில இந்திய நீர்வழிப் போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளன 11வது மாநாடு சென்னையில் எழுச்சியுடன் தொடக்கம்
3 Oct 2026, 1:23 am

அகில இந்திய நீர்வழிப் போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளன 11வது மாநாடு சென்னையில் எழுச்சியுடன் தொடக்கம்

சென்னை, அக்.2-அகில இந்திய நீர்வழிப்போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனத்தின் 11வது அகில இந்திய மாநாடு வெள்ளியன்று (அக்.2)சென்னையில் எழுச்சியுடன் தொடங்கியது.

தொழிற்சங்க வரலாறு

சம்மேளன தலைவர் சி.டி.நந்தகுமார் கொடியேற்றி தலைமை தாங்கிய மாநாட்டிற்கு, வரவேற்பு குழு தலைவரும் மெட்ராஸ் போர்ட் அண்ட் டாக் எம்ப்ளாயீஸ் யூனியன் தலைவருமான அ.சவுந்தரராசன் வரவேற்றுப் பேசினார். அப்போது அவர் சென்னை மாநகரின் பாரம்பரியமிக்கதொழிற்சங்க வரலாற்றை சுருக்கமாக விளக்கினார். தொடர்ந்து, சம்மேளன செயலாளர் ஆர்.ரசல் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார்.

சிறப்புரை

சிஐடியு பொதுச்செயலாளர் எளமரம் கரீம்மாநாட்டைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். நீர் வழி போக்குவரத்து தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் டி.நரேந்திர ராவ் பொதுச்செயலாளர் அறிக்கையைத் தாக்கல் செய்து பேசினார். சம்மேளன பொருளாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி வரவு செலவுஅறிக்கையைத் தாக்கல் செய்தார்.

பிரதிநிதிகள் விவாதம்

இதனைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் அறிக்கை மீதான பிரதிநிதிகளின் விவாதம் தொடங்கியது. விவாதத்திற்குப் பதில் அளித்து நாளை (அக்.3) பொதுச்செயலாளர் பேசுகிறார். சிஐடியு அகில இந்தியசெயலாளர் ஆர்.கருமலையான் மாநாட்டை வாழ்த்திப் பேச உள்ளார். மாநாட்டின் நிறைவில் சம்மேளனசெயற்குழு உறுப்பினர்கள் உட்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வாழ்த்துரை

இம்மாநாட்டில், இந்திய பார்வேர்டு சீமென் யூனியன் தலைவர் பங்கிம் பாரதி, மும்பை ஜவஹர்லால் நேரு

துறைமுக ஆணைய உறுப்பி

னர் பூஷன் பாட்டீல், கொல்கத்தா ஹால்டியா துறைமுக தொழிற்சங்க தலைவர் பிமன் மிஸ்திரி,கொல்கத்தா சியாமபிரசாத் முகர்ஜி துறைமுக ஆணையத்தின் சமரேந்திர மண்டல்,ஒடிசா பரதீப் இண்டஸ்ட்ரியல் எம்பிளாயீஸ் யூனியன்தலைவர் உலாஸ் சுவைன், பரதீப் பந்தர் தொழிலாளர் யூனியன் தலைவர் கே.சி.சுதர், இந்திய பார்வேர்ட் சீமென்ஸ் யூனியன் (மும்பை) பொதுச்செயலாளர் மனோஜ் யாதவ், கொல்கத்தா பார்வேர்ட் சீமென்ஸ் யூனியன் தலைவர் பயாஸ் அகமது கான், யுனைடெட் போர்ட் அண்ட் டாக் எம்ப்ளாயீஸ்யூனியன் (விசாகப்பட்டினம்) நிர்வாகி கே.சத்யநாராயணா, கங்காவரம் துறைமுக தொழிற்சங்க நிர்வாகி ஜெகன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

மாநாட்டை நிறைவு செய்து மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும் சிஐடியு அகில இந்தியதலைவர்களில் ஒருவருமான தபன்சென் சிறப்புரையாற்ற உள்ளார். மாநாட்டின் இறுதியில் அகில இந்திய நீர்வழிப்போக்குவரத்து சம்மேளனசெயலாளர் வி.தமிழ்ச்செல்வன் நன்றி கூறுகிறார். இம்மாநாட்டில் துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும்ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக ஒன்றிய அரசை வலியுறுத்தும் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.