தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நல்கொண்டாவில் சங்கமிக்கும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் - ப.துளசி நாராயணன்

11 Nov 2026, 8:49 pm
நல்கொண்டாவில் சங்கமிக்கும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் - ப.துளசி நாராயணன்

நல்கொண்டாவில் சங்கமிக்கும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் - ப.துளசி நாராயணன்

1936 ஏப்ரல் 11 அன்று உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் பிறந்த அகில இந்திய விவசாயிகள் சங்கம் (அஇவிச) என்ற குழந்தை, இன்று 90 வயதுசிரஞ்சீவியாகப் பரிணமித்திருக்கிறது. 90 ஆண்டுகளில் அது நடத்திய போராட்டங்கள் ஏராளம்; வேளாண்சமூகத்துக்கு அது பெற்றுத்தந்த உரிமைகள் எண்ணிலடங்காதவை. அதன் 36-வது அகில இந்திய மாநாடு,தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தின் மண்ணான நல்கொண்டாவில் நவம்பர் 15 முதல் 18 வரை நடைபெறுகிறது.

அஇவிச போராட்டக் களத்தில் உருவானது. இந்தியக் கிராமப்புறக் கிளர்ச்சிகள் அனைத்தின் மையப்புள்ளி “நில உரிமை” என்பதே. இன்று “விவசாயி” என்ற அடையாளம் பெற்றிருப்பவர்கள், 150 ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த அடையாளத்தைப் பெற முடியாத நிலையில் வாழ்ந்தனர். ஜமீன்தார்களுக்கும் ஜாகீர்தார்களுக்கும் கட்டுப்பட்ட குத்தகைவிவசாயிகளாக, கட்டாயக் குத்தகை, வரி, வாரம் எனக் கொடுத்துக் கொடுத்து ஓட்டாண்டிகளாக பிழைத்துக் கிடந்தனர்.

களத்துமேட்டிலிருந்து ஜமீன் வரை

1757 வரை விவசாயிகள் தங்கள் விளைச்சலில் ஒரு பங்கை, களத்துமேட்டிலேயே தானியமாக அளந்து அரசர்களுக்கும் சிற்றரசர்களுக்கும் வழங்கி வந்தனர். 1757-ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கால் பதித்த பிறகு, 30 முதல் 40 கிராமங்களை உள்ளடக்கியநிலப்பரப்பு ஒரே ஜமீனிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த நிலம் பல விவசாயிகளுக்குக் குத்தகைக்கு விடப்பட்டது.நிர்ணயிக்கப்பட்ட குத்தகையைப் பணமாகச் செலுத்த வேண்டும். அரசு நிர்ணயித்ததைவிடப் பத்து மடங்கு கூடுதலாக ஜமீன்கள் வசூலித்தனர். இயற்கைச் சீற்றத்தால் விளைச்சல் இல்லாதபோதும் செலுத்தியாக வேண்டும்; தவறியவர்கள் நிலத்திலிருந்து விரட்டப்பட்டனர்.

எதிர்ப்புக் குரல்களை ஒடுக்க இந்தியப் பாதுகாப்புச் சட்டம் (1915), ரௌலட் சட்டம் எனப்படும் அராஜக, புரட்சிகர, கிரிமினல் குற்றங்கள் (தடுப்பு)சட்டம் (1919) போன்ற அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஜமீன்தார்களைப் பாதுகாக்க வருவாய்,காவல், நீதித் துறைகள் என அரசு இயந்திரமே அணிவகுத்தது. சுரண்டல் தீவிரமானது.

கொதித்தெழுந்த கிராமங்கள்

கொதிநிலையை அடைந்த விவசாயிகளும், பண்ணையடிமைகளும், ஆதிவாசிகளும் நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்தனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தன் அசுர பலத்தால் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று குவித்து, போராட்டங்களை ஒடுக்கியது. சிதறிக் கிடந்த இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைக்க, பரந்துபட்ட அமைப்பு தேவை என்று உணர்ந்த தலைவர்களின் சிந்தனையில் உதித்ததுதான் அஇவிச.

உதயமானது அஇவிச

சுவாமி சகஜானந்த சரஸ்வதி (பீகார்), என்.ஜி. ரங்கா (ஆந்திரம்), இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் (கேரளம்),இந்துலால் யாக்னிக் (குஜராத்), சோகன் சிங் ஜோஷ்(பஞ்சாப்), ஆச்சார்ய நரேந்திர தேவ் (உ.பி.), ஜெயப்பிரகாஷ் நாராயண் உள்ளிட்ட பல தலைவர்கள் முதல் மாநாட்டில் பங்கேற்று அகில இந்திய விவசாயிகள் சங்கம்எனும் அமைப்பை உருவாக்கினர். சகஜானந்த சரஸ்வதி முதல் தலைவராகவும், என்.ஜி. ரங்கா முதல்பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்றனர். தேசிய விடுதலைப் போராட்டத்தின் இடதுசாரிப்பிரிவினரும் கம்யூனிஸ்ட்டுகளும் சோசலிஸ்ட்டுகளும் ஒரே மேடையில் கைகோத்த தருணம் அது.

பிரிட்டிஷ் பிடியிலிருந்து நாடு முழுச் சுதந்திரம் அடைய வேண்டும்; விவசாயிகளின் நில உரிமையை நிலைநாட்டப் போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று மாநாடு பிரகடனம் செய்தது. அஇவிச

தோன்றிய பிறகுதான் கிராமங்களின் குரல்கள் முறைப்படுத்தப்பட்டு, ஒன்றிணைக்கப்பட்டு, வர்க்க ரீதியாக அணிதிரட்டப்பட்டன.

போராட்டங்களின் மகுடம்

1937 ஜூனில் ஆந்திரத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடங்கிய விவசாயிகள் நடைபயணம், 1938 மார்ச்சில் அன்றைய மாகாணத் தலைநகர்சென்னையை வந்தடைந்தது. 1,512 மைல், 500 கிராமங்கள், 4.5 லட்சம் பேர் பங்கேற்பு. 1946–47 வங்கத்தின் தேபாகா போராட்டம், 1946 கேரளத்தின் புன்னப்புரா–வயலார் எழுச்சி, 1945–47 மகாராஷ்டிரத்தின் வொர்லி ஆதிவாசிகள் கிளர்ச்சி, பீகாரின் பகாஷ்த் போராட்டம்,அசாமின் சுர்மா பள்ளத்தாக்கு, திரிபுராவின் கண முக்தி பரிஷத், தஞ்சையில் ஜமீன்தார்களுக்கு எதிரான, பண்ணையடிமை விடுதலைக்கான போராட்டங்கள் எனத் தொடர் போராட்டங்கள் வரலாற்றில்இடம்பெற்றன.

இவை அனைத்துக்கும் மகுடம் சூட்டியது 1946–51 தெலுங்கானா ஆயுதப் போராட்டம். 16,000சதுர மைல் பரப்பில் 30 லட்சம் மக்கள் வசித்த 3,000 கிராமங்கள் விடுவிக்கப்பட்டன. 10 லட்சம் ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. 4,000 போராளிகள் உயிர் நீத்தனர்; 10,000பேர் நான்கு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட்டனர். 1952 தேர்தலில் நல்கொண்டா, வாரங்கல், கம்மம் மாவட்டங்களின் 29 தொகுதிகளில் 23-ஐ செங்கொடிகைப்பற்றியது. அந்த மண்ணில்தான் இப்போது மாநாடு கூடுகிறது.

1968 டிசம்பர் 25 அன்று, ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் வெண்மணியில், விவசாயிகள் சங்கக்கொடியை இறக்க மறுத்து, சங்கத்திலிருந்து விலக மறுத்த விவசாயத் தொழிலாளர்களில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 44 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். கூலி உயர்வுக்காகவும் கண்ணியத்துக்காகவும் போராடியதற்கு நிலப்பிரபுக்கள் கொடுத்த பதில் அது. ஆனால் அந்தத் தீ செங்கொடியை சாம்பலாக்கவில்லை; மாறாக, தஞ்சை மண்ணில்இயக்கத்தை மேலும் ஆழமாக வேரூன்றச் செய்தது.

செங்கொடியின் நிழலில் நடந்த இந்தப் போராட்டங்களால்தான் 1948 முதல் மாநிலம்தோறும் ஜமீன் ஒழிப்பு, நிலச் சீர்திருத்தச் சட்டங்கள் வந்தன. “விவசாயி” என்ற அடையாளம் கிடைத்தது; இலவச உழைப்புக்கு முடிவு கட்டப்பட்டது.

நாசிக் முதல் தில்லி வரை

2018 மார்ச் 6 முதல் 12 வரை, நாசிக்கிலிருந்து மும்பைக்கு 200 கிலோமீட்டர் தூரம் 50,000 விவசாயிகளும் ஆதிவாசிகளும் அஇவிச பதாகையின் கீழ் நடந்தனர். ரத்தம் கசியும் கால்களோடு மும்பை நகருக்குள் நுழைந்த அவர்களை நகர மக்கள் உணவும் நீரும் தந்து வரவேற்றனர்; மகாராஷ்டிர அரசுகோரிக்கைகளை ஏற்க வேண்டியதாயிற்று. 2024 ஜனவரியில் சரோட்டியிலிருந்து பால்கருக்கு 50,000 பேரும், 2026 அக்டோபரில் அகோலாவிலிருந்து மும்பைக்கு 12,000 பேரும் நடைபயணம் மேற்கொண்டனர். இத்தகைய திரட்டல் இந்திய அரசியல் போராட்டக் களத்தில் வேறு யாராலும் முடியாது.

2020 நவம்பர் 26 முதல் 2021 டிசம்பர் 11 வரை, 750 விவசாயிகளின் உயிர்த்தியாகத்தோடு நடந்த தில்லி விவசாயிகள் போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்தது. அது திடீரென வெடித்ததல்ல. 2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தைத் திருத்த 2015-ல் மோடி அரசு முயன்றபோது, 40 அமைப்புகளை ஒன்றுதிரட்டி “பூமி அதிகார் அந்தோலன்” எனும் மேடையை அமைத்து வென்றது அஇவிச. 2017-ல் 150 அமைப்புகளோடு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவும், 2020-ல் 500-க்கும் மேற்பட்டஅமைப்புகளோடு ஐக்கிய விவசாயிகள் முன்னணியும் (எஸ்கேஎம்) உருவாயின. தில்லி எல்லைகளில் நடந்தபோராட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தியதில் மூளையாகவும் முதுகெலும்பாகவும் திகழ்ந்தது அஇவிச. நிலம், உரியஇழப்பீடு, விளைபொருளுக்கு நியாய விலை, விதை, உரம், பயிர்க் காப்பீடு போன்ற பிரதான கோரிக்கைகளை முன்வைத்து அது களத்தில் நின்றது; வென்றது. மூன்று வேளாண் சட்டங்களையும் மோடிஅரசு மண்டியிட்டுத் திரும்பப் பெற்றது.

காத்திருக்கும் சவால்கள்

இந்திய வேளாண் துறை கார்ப்பரேட்டுகளுக்கு மிகப்பெரிய சந்தை. அதை விழுங்க வேண்டுமானால் விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்ற வேண்டும். அதற்குத் துணையாக, கார்ப்பரேட் ஆதரவு, நவதாராளமய, மதவெறிக் கொள்கைகளைக் கொண்ட ஒன்றிய பாஜக அரசு சேவகம் செய்யத் துடிக்கிறது. ஆனால் அது வீழ்த்த முடியாத சக்தி அல்ல என்பதைத் தில்லிப் போராட்டம் நிரூபித்தது. அதன் பிறகு நடந்தநாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்தது. கூட்டணிக் கட்சிகளின் தயவில்தான் இன்று ஆட்சி நடக்கிறது. ஆனாலும் கார்ப்பரேட் விவசாயத்தை வேறு வழிகளில் திணிக்கும் முயற்சிகள் ஓயவில்லை. அவற்றை முறியடிக்கஇன்னும் பரந்த ஒற்றுமை தேவை.

வேளாண் சமூகம் இன்று பெற்றுள்ள உரிமைகள் அனைத்தும், லட்சக்கணக்கான விவசாயிகள், ஆதிவாசிகள்,பண்ணையடிமைகளின் ஒன்றுபட்ட போராட்டங்களாலும், உயிர்த்தியாகம், சிறைவாசம், சித்ரவதைகளாலும்பெறப்பட்டவை. வேளாண் துறையில் மாறிவரும் உற்பத்தி உறவுகளை உள்வாங்கி, கார்ப்பரேட், ஏகாதிபத்திய நவீனச் சுரண்டலைஎதிர்க்கப் புதிய வியூகங்களை வகுக்கும் ஆய்வுக்கூடமாக நல்கொண்டா மாநாடு அமையும்.

நில உரிமைக்கான கிளர்ச்சிகள்

1770–1800: வங்கத்தில் இந்து–முஸ்லிம் சன்னியாசிகள், பக்கீர்களின் ஒன்றுபட்ட ஆயுதப் போராட்டம்.

1855–56: சந்தால் ஆதிவாசிகளின் ஆயுத எழுச்சி; 15,000 முதல் 25,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அரசு ஆவ

ணங்கள் கூறுகின்றன.

1859–60: வங்கம், பீகாரில் அவுரி (இண்டிகோ) எதிர்ப்புப் போராட்டம்.

1899–1900: “எங்கள் நிலம் – எங்கள் ஆட்சி”என்ற முழக்கத்தோடு, 25 வயதுஇளைஞர் பிர்சா முண்டா தலைமையில் முண்டாஆதிவாசிகள் கிளர்ச்சி.

1921: மலபாரில் மாப்பிள்ளை எழுச்சி; 45,404 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர், 2,337 பேர் கொல்லப்பட்டனர்.

1922–24: ஆந்திரத்தில் அல்லூரி சீதாராம ராஜு தலைமையில் ஆயுதப் போராட்டம்.

1928: பம்பாய் மாகாணத்தில் பர்தோலி வரிகொடா இயக்கம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.