தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அகில இந்திய ஹாக்கி போட்டி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையம்  சாம்பியன் பட்டம் வென்றது

28 Mar 2026, 4:13 pm
அகில இந்திய ஹாக்கி போட்டி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையம்  சாம்பியன் பட்டம் வென்றது
<p><strong>அகில இந்திய ஹாக்கி போட்டி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையம் &nbsp;சாம்பியன் பட்டம் வென்றது</strong></p> <p>தூத்துக்குடி,மார்ச் 28- அகில இந்திய முக்கியத் துறைமுகங்களுக்கு இடையிலான 47-ஆவது ஹாக்கி போட்டி மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்றது.இதில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கொல்கத்தாவிலுள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுக ஆணையத்தின் சார்பில் &nbsp;கடந்த 24.03.2026 முதல் 27.03.2026 வரை இப்போட்டிகள் நடைபெற்றன. இதில் தேசிய அளவில் தகுதி பெற்ற சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுக ஆணையம் (கொல்கத்தா), வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் (தூத்துக்குடி), சென்னை துறைமுக ஆணையம், மும்பை துறைமுக ஆணையம், விசாகப்பட்டினம் துறைமுக ஆணையம், பாரதீப் துறைமுக ஆணையம் ஆறு முக்கியத் துறைமுக அணிகள் பங்கேற்றன. தங்கப் பதக்கத்திற்கான இறுதிப் போட்டியில், வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையமும், கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுக ஆணையமும் மோதின. ஆட்டத்தின் இறுதிவரை இரு அணிகளும் சமபலத்துடன் போராடிய நிலையில், இறுதியில் வ.உ.சிதம்பரனார் துறைமுக அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.