அகில இந்திய பொது வேலை நிறுத்தப் பிரச்சாரம்
10 Feb 2026, 4:50 pm
<p><strong>அகில இந்திய பொது வேலை நிறுத்தப் பிரச்சாரம்</strong></p>
<p>கோவை, பிப்.10- தொழிலாளர் நல சட்டங் களை கார்ப்பரேட் முதலாளிக ளுக்கு சாதகமாக மாற்றிய ஒன் றிய மோடி அரசை கண்டித்து பிப்ரவரி 12 இல் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளது. இதனை விளக்கி கருதரங்கம், வேலை நிறுத்த ஆயத்த மாநாடு, தெரு முனைக் கூட்டம் என கோவை யில் பல்வேறு பகுதிகளில் செவ் வாயன்று மத்திய தொழிற்சங் கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் விதொச சங்கத்தினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள் ளனர். கோவை சுங்கம் பணிமனை, காந்திபார்க் ரவுண்டானா, இராமநாதபுரம். காமராஜபுரம், இருகூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில், சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் பங் கேற்று சிறப்புரையாற்றினர். இதில், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் வேலுச்சாமி, அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க மாநிலச் செய லாளர் கனகராஜ் மற்றும் சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் திர ளானோர் பங்கேற்றனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத் தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பிரச் சார இயக்கத்திற்கு, சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் கே.மோகன் தலைமை தாங்கி னார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.அசோ கன் சிறப்புரையாற்றினார். இதில், ஏஐசி சிடியு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். உடுமலை உடுமலையில் நடைபெற்ற பிரச்சாரத் திற்கு ஏஐடியூசி செளந்தரராஜன் தலைமை ஏற்றார். இதில், மத்திய தொழிற்சங்க நிர்வாகி கள் திரளானோர் பங்கேற்றனர்.</p>
