தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெண்ணுரிமைப் போராளி உ. நிர்மலாராணி மறைவு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் செவ்வஞ்சலி

19 Mar 2026, 3:18 pm
பெண்ணுரிமைப் போராளி உ. நிர்மலாராணி மறைவு  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் செவ்வஞ்சலி
<p><strong>பெண்ணுரிமைப் போராளி உ. நிர்மலாராணி மறைவு &nbsp;அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் செவ்வஞ்சலி</strong></p> <p>சென்னை, மார்ச் 19 - &ldquo;அநீதிகளுக்கு எதிராகச் சட்டத் தையே ஆயுதமாக ஏந்திப் போராடிய அர்ப்பணிப்பு மிக்க பெண்ணுரிமைப் போராளி வழக்கறிஞர் - டாக்டர் உ. நிர்மலா ராணி மறைவு, பெண்கள் இயக்கத்திற்குப் பேரிழப்பாகும்&rdquo; என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினரான வழக்கறிஞர் உ. நிர்மலா ராணி, கடந்த 17.03.2026 அன்று காலமானார். அவரது மறைவையொட்டி சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி. பிரமிளா, பொதுச்செயலாளர் அ. ராதிகா ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு: போராட்ட மரபின் தொடர்ச்சி தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களான தோழர்கள் ஆர். உமாநாத் - பாப்பா உமாநாத் ஆகியோ ரின் மகளும், சிபிஐ(எம்) அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகியின் சகோதரியுமான நிர்மலா ராணி ஒரு &nbsp;போராட்ட மரபில் வளர்ந்தவர்; அந்தத் தியாக மரபைத் தனது வாழ்நாள் முழுவதும் உறுதியோடு தொடர்ந்தவர். சட்டத்தை ஆயுதமாக்கிய போராளி வழக்கறிஞராகப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைக் காக நீதிமன்றங்களிலும், களப் போராட்டங்களிலும் தீவிரமாகத் தடம் பதித்தவர். பொதும்பு பள்ளி மாணவிகள் மீதான வன்முறை முதல் திட்டக்குடி பாலியல் சுரண்டல் வழக்குகள் வரை, அவர் முன்னெடுத்த சட்டப் போராட்டங்கள் &nbsp;ஒவ்வொன்றும் பெண் களின் வாழ்வுரிமைக்கான வரலாற்றுச் சான்று களாகும். &ldquo;குரலற்றவர் களின் குரலாக ஒலிப்பதே அரசியல்&rdquo; என்ற மார்க்சிய - பெண்ணிய நிலைப்பாட்டின் அடிப்படையில், உண்மை கண்டறியும் குழுக்களில் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டவர். இயக்கத்திற்குப் பேரிழப்பு சாதி, வர்க்கம், பாலினம் ஆகிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டங்களை முன்னெடுத்தவர். அவர் தயாரித்த சட்ட ஆவணங்களும் ஆய்வறிக்கை களும் பெண்கள் இயக்கத்திற்கு என்றும் வழிகாட்டும் அரசியல் ஆயுதங்களாகத் திகழும். அவரது மறைவு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். டாக்டர் நிர்மலா ராணி அவர்கள் முன்னிறுத்திய மார்க்சிய - பெண்ணியப் போராட்டப் பாதை யைத் தொடர்ந்து முன்னெடுப்பதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மை யான அஞ்சலியாகும். அவரது மறைவால் துயருற்றுள்ள குடும்பத்தி னருக்கும், தோழர்களுக்கும் மாதர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலையும், செவ்வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.