தணிக்கை மற்றும் கணக்கு அதிகாரிகள் சங்கத்தின் அகில இந்திய மாநாடு
13 Mar 2026, 4:52 pm
<p><strong>தணிக்கை மற்றும் கணக்கு அதிகாரிகள் சங்கத்தின் அகில இந்திய மாநாடு</strong></p>
<p>சென்னை, மார்ச் 13 - அகில இந்திய தணிக்கை மற்றும் கணக்கு அதிகாரிகள் சங்கத்தின் 39 வது அகில இந்திய மாநாடு சென்னையில் மார்ச் 12 அன்று தொடங்கியது. துவக்க அமர்வு வியாழனன்று (மார்ச் 12) நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் பி.கே.உபாத்யாய் தலைமையில் நடை பெற்ற இந்த மாநாட்டில் துணை பொதுச்செய லாளர் எல்.ரமா வரவேற்றார். சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் அ.சவுந்தர ராசன் மாநாட்டை தொடங்கி வைத்தார். சென்னை தணிக்கை இயக்குநர் ஜெனரல் (தெற்கு ரயில்வே), ஆர்.அம்பலவாணன் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்க செயலாளர் எஸ்.பி.யாதவ், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோ, அகில இந்திய தணிக்கை மற்றும் கணக்கு ஓய்வூதியதாரர்கள் சங்க ஒருங்கி ணைப்பாளர் எஸ்.மோகன், அகில இந்திய தணிக்கை மற்றும் கணக்குகள் சங்கம் தலைவர் கே.ரமேஷ் உள்ளிட்டோர் பேசினர். சங்கத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.உமாபதி நன்றி கூறினார். தீர்மானங்கள் அகில இந்திய கணக்கு தணிக்கை மற்றும் கணக்கு அதிகாரிகள் சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்குவதற்கான செயல்முறையைத் தொடங்கவேண்டும், பிரயாக்ராஜில் உள்ள பி.ஏ.ஜி (தணிக்கை I) அலுவலகம் மற்றும் போபாலில் உள்ள ஏ.ஜி (தணிக்கை II) அலுவலகங்களில் உள்ள எஸ்.ஏ.ஓ சங்கங்களுக்கு அங்கீ காரம் வழங்கவேண்டும், புதிய ஆட்சேர்ப்பு விதிகள் வெளியிடப்பட்டு மூன்று ஆண்டு கள் கடந்த பின்னரும், அவை இன்னும் அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப் படாதது வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. எனவே, இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரான சி.ஏ.ஜி இவ்விவகாரத்தில் தலையிட்டு, பணி உயர்வு ஆணைகளை வழங்குவதற்கும், ஐ.ஏ.ஏ.எஸ் பணிக்கான புதிய ஆட்சேர்ப்பு விதிகளை அரசிதழில் வெளியிடுவதற்கும் தகுந்த நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். மூத்த கணக்காய்வு அதிகாரிகளுக்கான பதவி உயர்வு வரிசையில், குரூப் அலுவலர் பணியிடங்களின் (குரூப் ஏ - ஐ.ஏ.ஏ.எஸ் அல்லாதவை) எண்ணிக் கையை சாதகமான முறையில் அதிகரிக்க வேண்டும், பொதுத்துறை வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், எல்ஐசி, மூலதன மறுசீரமைப்பு செய்யப் பட்ட நிதி நிறுவனங்கள், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள், பொது நிதியைப் பெறும் இதர நிதி அமைப்புகள்.இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் தணிக்கை வரம்பிற்குள் கொண்டு வரத் தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.</p>
