பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு இன்று துவக்கம்!
16 Dec 2025, 6:10 pm

பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு இன்று துவக்கம்!

கோவை, டிச.16- கோவையில் டிச.17இல் (இன்று) தொடங்கும் பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்கத்தின் அகில இந் திய மாநாட்டில் பல்வேறு கோரிக் கைகளின் மீது விரிவான விவா தங்கள் நடைபெற்று, அதனடிப்ப டையில் பல்வேறு போராட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வுள்ளது என சங்கத்தின் தலை வர்கள் தெரிவித்தனர். பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்கத்தின் 5 ஆவது அகில இந்திய மாநாடு கோவையில் உள்ள லோட் டஸ் மகாலில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து, கோயம்புத் தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் செவ்வாயன்று சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.ஜி. ஜெயராஜ். அகில இந்திய அமைப்பு செயலாளர் வி.வெங்கட்ராமன், பொதுச் செயலாளர் ஆர்.ராஜசே கர், மாவட்டச் செயலாளர் ஏ.குடி யரசு, மாநில ஆலோசகர் சி.கே.நர சிம்மன் செய்தியாளர்களுக்கு பேட் டியளித்தனர். அப்போது, வருகிற டிச.17,18 ஆகிய தேதிகளில் நடை பெற உள்ள மாநாட்டுக்கான விரி வான ஏற்பாடுகளை வரவேற் புக்குழுவினர் செய்துள்ளனர். மாநாட்டில் வரவேற்புக்குழு தலைவரும், நாடாளுமன்ற முன் னாள் உறுப்பினரும், சிஐடியு மூத்த தலைவருமான டி.கே.ரங்கராஜன், மூத்த பத்திரிக்கையாளரும், தி இந்து நாளிதழின் இயக்குநருமான என்.ராம், தொலைத் தொடர்பு நிறு வனத்தின் மூத்த அதிகாரி வந்தனா குப்தா, சங்கத்தின் ஆலோசகர் வி.ஏ.என். நம்பூதிரி, அகில இந்திய தலைவர் எம்.ஆர். தாஸ், மாநில பொதுச் செயலாளர் ஆர்.ராஜசே கர் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் அனிமேஷ் மித்ரா ஆகி யோர் சிறப்புரையாற்ற உள்ளனர். மேலும், இம்மாநாட்டில் பிஎஸ் என்எல் டாட் ஓய்வூதியதாரர்க ளுக்கு 1.1.2017 முதல் வழங்க வேண் டிய ஓய்வூதிய மாற்றத்தை உடன டியாக செயல்படுத்தல் மற்றும் மேம்பட்ட மருத்துவச் சலுகைகள் வழங்க வேண்டும். மகாராஷ்டிரா மாநிலம் எஸ்சி, எஸ்டி ஓய்வூதியர் களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஓய்வூதியச் சட்டங்கள் மறுசீராய்வு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளின் மீது விரி வான விவாதங்கள் நடைபெற உள் ளது. விவாதங்களின் அடிப்படை யில் பல்வேறு போராட்டத் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட உள் ளன என தெரிவித்தனர்.

தேசியக்கொடி பயணக்குழுவிற்கு ஈரோட்டில் வரவேற்பு

அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்கத்தின் 5 ஆவது அகில இந்திய மாநாடு கோவையில் நடைபெற உள்ள தையடுத்து, தேசியக்கொடி பய ணம் வேலூர் கோட்டையிலி ருந்து புறப்பட்டு, செவ்வாயன்று ஈரோடு வந்தடைந்தது. ஈரோடு டெலிபோன் பவன் அலுவலகம் முன்பு கொடிப்பயண குழுவிற்கு ஈரோடு மாவட்ட ஒருங்கிணைக் புக்குழுவினர் உற்சாக வரவேற் பளித்தனர். இந்நிகழ்விற்கு, ஓய் வூதியர் சங்க மாவட்டத் தலை வர் பி.சின்னசாமி தலைமை வகித்தார். மாநில உதவித்தலை வர் என்.குப்புசாமி வரவேற்றார். மாநில உதவிச்செயலாளர்ர் எல். பரமேஸ்வரன், சிஐடியு மாவட்ட உதவித்தலைவர் ஆர்.ரகுரா மன், சிறுபான்மை மக்கள் நலக் குழு செயலாளர் ப.மாரிமுத்து, சிஐடியு முன்னாள் துணைத்தலை வர் கே.துரைராஜ், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.பாலு, திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் சூசை, ஒப் பந்த தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் எம்.சையத் இத்ரீஸ், பயணக்குழுவைச் சார்ந்த மாநி லத் தலைவர் சி.ஞானசேகரன், மாநில உதவிப் பொருளாளர் சரவ ணன், மாவட்டத் தலைவர் தங்க வேல், செயலாளர் முருகன் உள் ளிட்டோர் எழுச்சிமிகு உரையாற் றினர். பயணக்குழுவினர் அனை வருக்கும் பயனாடை அணி வித்து, குறு நூல் நினைவுப் பரி சாக வழங்கப்பட்டது. முடிவில், மாவட்டச் செயலாளர் வி.மணி யன் நன்றி தெரிவித்தார்.