முந்தய பக்கம்

திருப்புறம்பியத்தில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

18 Dec 2025, 4:38 pm
திருப்புறம்பியத்தில் அகில இந்திய விவசாயத்  தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
<p><strong>திருப்புறம்பியத்தில் அகில இந்திய விவசாயத் &nbsp;தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்&nbsp;</strong></p> <p>கும்பகோணம், டிச.18- &nbsp;கும்பகோணம் அருகே, திருப்புறம்பியத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றக் கூடாது. நூறுநாள் வேலைக்கான நிதியை குறைக்காமல் 200 நாட்களாக உயர்த்தி தினக்கூலி ரூ.600 வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்கம் கும்பகோணம் ஒன்றியச் செயலாளர் ஜெ.செந்தில் தலைமை வகித்தார். கும்பகோணம் ஒன்றியத் தலைவர் நாகமுத்து, பெண் விதொச பொறுப்பாளர் சிந்தனை செல்வி, &nbsp;கிளைச் செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். &nbsp; ஆர்பாட்டத்தை விளக்கி சங்க மாநிலச் செயலாளர் வி. மாரியப்பன், மாநிலக் குழு உறுப்பினர் நாகராஜ், மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு, மாமன்ற உறுப்பினர் செல்வம், மாற்றுத் திறனாளிகள் சங்க மாநிலக் குழு உறுப்பினர் பழ.அன்புமணி உள்ளிட்ட ஏராளமானோர் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram