வெளிநாட்டுப் பயண செயல்முறை அனைத்தும் மதுரை விமான நிலையத்திலேயே கிடைக்கும்! மதுரை - விருதுநகர் எம்.பி.க்களின் முயற்சி வெற்றி
2 Apr 2026, 3:50 pm
<p><strong>வெளிநாட்டுப் பயண செயல்முறை அனைத்தும் மதுரை விமான நிலையத்திலேயே கிடைக்கும்! மதுரை - விருதுநகர் எம்.பி.க்களின் முயற்சி வெற்றி</strong></p>
<p>புதுதில்லி, ஏப். 3 - வெளிநாட்டு பயணத்திற்கான அனைத்து விதமான செயல்முறைகளையும் மதுரையிலேயே செய்துகொள்ள முடியும் என அறிவிப்பு வெளியிட்டுள்ள ஒன்றிய அமைச்சருக்கு சு. வெங்கடேசன் எம்.பி. நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தமது சமூகவலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “மதுரை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டதற்கு, நாடாளுமன்ற கேள்வி நேரத்தின் போது, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், அவர் சார்பிலும், மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான என் சார்பிலும், மதுரை மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்தார். மேலும் சர்வதேச விமான நிலையத்தின் அடுத்தகட்ட பணிகளாக ‘பாயிண்ட் ஆப் கால்’ இணைப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்த கோரிக்கையை முன் வைத்தார். இதற்குப் பதிலளித்த ஒன்றிய அமைச்சர் ராம்மோகன், அதற்கான பணிகளை முன்னெடுப்பதாக அவையிலேயே தெரிவித்தார். மேலும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அடிப்படையில், மதுரை சர்வதேச விமான நிலையத்தில் பயணத்தை துவங்கும் பயணி ஒருவர், அவரது வெளிநாட்டு பயணத்திற்கான அனைத்து விதமான செயல்முறைகளையும் மதுரையிலேயே செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். எனவே, தொடர்ந்து அனைத்து விதமான வசதிகளையும் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வர முயற்சி செய்து வெற்றி பெறுவோம். இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. கூறியுள்ளார்.</p>
