சென்னை முக்கிய செய்திகள்
7 Feb 2026, 5:37 pm

இன்று மின்தடை

சென்னை, பிப்.7- சென்னையில், பரா மரிப்பு பணிகளுக்காக, ஞாயிறன்று அம்பத்தூரில் டிஐ சைக்கிள் 3-வது பிரதான சாலை. 6-வது தெரு முதல் 9-வது தெரு ,அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மகாத்மா காந்தி சாலை 4-வது, 5-வது, 6-வது தெரு, மகாத்மா காந்தி சாலை 11-வது, 12-வது தெருக்கள், காமராஜ் நகர் பிரதான சாலை சிட்கோ தொழிற்பேட்டை, ரயில்வே ஸ்டேஷன் சாலை 5-வது, 6-வது, 7-வது தெரு ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப் படும் பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரி வித்துள்ளது.

விழுப்புரத்தில் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்பு

விழுப்புரம், பிப்.7- விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில், ஒன்றிய, மாநில அரசுகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது ஒன்றிய, மாநில அரசுகளால் அரசால் நடத்தப்படும் ஆர்ஆர்பி, ஐபிபிஎஸ், எஸ்எஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கும், விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் பயிற்சி வகுப்புகள், அதற்காக பாட வாரியான தேர்வுகளும் மற்றும் மாதிரி தேர்வுகளும் நடத்தப் பட உள்ளது.இது அரிய வாய்ப்பாகும். ஒன்றிய அரசு பணிக்கான தேர்வுக்கு தயாராகும் போட்டி தேர்வர் கள், இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணயம் வெளியிட்டுள்ள இந்தாண்டு குரூப் 4, குரூப் 2 ஆகிய தேர்வுக ளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் அலு வலக செய்தி குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளது.

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு

சென்னை, பிப்.7– சென்னையில் ஆப ரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமையன்று சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 அதி கரித்து கிராம் ரூ. 285-க்கும் கிலோவுக்கு ரூ.5,000 அதிகரித்து கிலோ ரூ.2,85,000-க்கும் விற்ப னையானது.

இளம்பெண் மர்ம மரணம்

திருவள்ளூர்,பிப்.7- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பெரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த கௌசல்யா (20) என்ற இளம்பெண், திருமணமான 5 மாதங்களிலேயே மர்மமான முறையில் உயிரிழந்தார். கௌசல்யா வீட்டில் தவறி விழுந்து காய மடைந்ததாகக் கூறி அவரது கணவர் ராஜேஷ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார், ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்து வர்கள் தெரி வித்தனர். கௌசல்யாவின் தலை மற்றும் முகத்தில் காயங் கள் இருந்ததால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதன்பேரில் பொன்னேரி போலீசார் ராஜேஷிடம் விசா ரணை நடத்துவதுடன், தடய அறிவியல் வல்லுநர்கள் உதவியுடன் ஆய்வு செய்து வருகின்றனர். திருமண மான சில மாதங்களிலேயே மர ணம் ஏற்பட்டுள்ளதால், இச்சம்பவம் குறித்து கோட்டாட்சியர் விசார ணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 9 மையங்களில் பிப்.12 மறியல் அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

புதுச்சேரி, பிப்.7- நாடு தழுவிய அளவில் வரும் 12ம் தேதி ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத போக்கினை கண்டித்து பொது வேலை நிறுத்தம் நடத்த புதுச்சேரியில் சிஐடியு உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாய சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்தை புதுச்சேரியில் வெற்றிகரமாக நடத்துவது குறித்து முதலி யார்பேட்டை ஏஐடியூசி அலுவலகத்தில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஏஐடியூசி மாநில தலைவர் தினேஷ் பொன்னையா, பொதுச் செய லாளர் அந்தோணி, சிஐடியு மாநில செய லாளர் சீனுவாசன், ஐஎன்டியூசி நிர்வாகி ஞானசேகரன், எல்பிஎப் தலைவர் அண்ணா அடைக்கலம், ஏஐசிசிடியூ நிர்வாகி விஜயா, எல்எல்எப் கலைவண்ணன், எம்எல்எப் மாசிலாமணி, என்டிஎல்எப் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தலைவர்கள் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகள் மற்றும் விதிகளை ரத்து செய்ய வேண்டும்,அணுசக்தி உற்பத்தியில் தனி யாருக்கு அனுமதி வழங்கக்கூடாது. புதுச்சேரியில் ரேசன்கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடத்தப்படுகிறது என்று தெரிவித்தனர்.