தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஓய்வுபெறும் நாளிலேயே அனைத்து பணப்பலன்களும் வழங்கப்பட வேண்டும்! போக்குவரத்து ஓய்வுபெற்றோர் சம்மேளன மாநில அமைப்பு மாநாடு தீர்மானம்

21 Feb 2026, 4:39 pm
ஓய்வுபெறும் நாளிலேயே அனைத்து  பணப்பலன்களும் வழங்கப்பட வேண்டும்! போக்குவரத்து ஓய்வுபெற்றோர் சம்மேளன மாநில அமைப்பு மாநாடு தீர்மானம்
<p><strong>ஓய்வுபெறும் நாளிலேயே அனைத்து &nbsp;பணப்பலன்களும் வழங்கப்பட வேண்டும்! போக்குவரத்து ஓய்வுபெற்றோர் சம்மேளன மாநில அமைப்பு மாநாடு தீர்மானம்</strong></p> <p>மதுரை, பிப்.21- &nbsp;தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஓய்வுபெற்ற ஊழியர் நல அமைப்பு களின் சம்மேளன மாநில அமைப்பு மாநாடு, சனிக்கிழமையன்று மதுரை யில் ஏ. ரைமண்ட் நினைவரங்கத்தில் (மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி &nbsp;வளாகம்) நடைபெற்றது. எம். சந்திரன் தலைமை வகித்தார். என்.மகாலிங்கம் சம்மேளனக் கொடி யை ஏற்றிவைத்தார். ஆர். போஸ் &nbsp;அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந் தார். ஆர். வாசுதேவன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் எஸ். நடராஜன் அறிக்கை முன்வைத்தார். &nbsp;சிஐடியு போக்குவரத்துத் தொழி லாளர் சம்மேளன பொதுச்செயலா ளர் கே.ஆறுமுக நயினார் துவக்க வுரையாற்றினார். வீ. பிச்சை தீர்மானங் &nbsp;களை முன்மொழிந்து பேசினார். தமிழ் &nbsp;நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பரமேஸ்வரன் உள்ளிட்ட தோழமைச் சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். போக்குவரத்துக் கழகங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க &nbsp;வேண்டும்; போக்குவரத்து துறையில் தனியார்மய முயற்சிகளை கைவிட &nbsp;வேண்டும்; ஓய்வுக்கால பணபலன் களை காலதாமதமின்றி வழங்க சட்டப் &nbsp;பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும்; குறைந்தபட்ச ஓய்வூதியத்தை &nbsp;ரூ.7,850 ஆக உயர்த்த வேண்டும்; ஓய்வு பெறும் நாளிலேயே அனைத்து பணப் பலன்களும் வழங்கப்பட வேண்டும்; குடும்ப ஓய்வூதியம் பெறும் காலத்தை 7 ஆண்டுகளிலிருந்து 10 &nbsp;ஆண்டுகளாக உயர்த்த வேண்டும்; குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும்; தன்னார்வ ஓய்வு பெறு பவர்களுக்கு கூடுதல் பணிக்காலம் மற்றும் சிறப்பு உயர்வு வழங்க வேண்டும்; பணிக்கொடை உச்ச வரம்பை ரூ. 25 லட்சமாக உயர்த்த &nbsp;வேண்டும்; ராணுவப் பணி குடும்ப &nbsp;ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படுவது போல அரசுப் பணி குடும்ப ஓய்வூதி யர்களுக்கும் அகவிலைப்படி வழங்க &nbsp;வேண்டும்; பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும்; மருத்துவப்படி தொகையை ரூ. 300 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்; 01.04.2003க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. உழைக்கும் மக்களுக்கு விரோத மான கொள்கைகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில், சம்மேளனத்தின் மாநிலத் தலைவராக வீ. பிச்சை, பொதுச் செயலாளராக எஸ். நட ராஜன், பொருளாளராக எஸ். ஆதி மூலம் மற்றும் நான்கு பொதுச் செயலாளர்கள் 16 துணைத் தலைவர் &nbsp;கள், 17 செயலாளர்கள் உள்ளிட்ட 36 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.