தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரயில் மறியலை வெற்றி பெறச் செய்ய அனைத்து பனியன் சங்க கூட்டம் உறுதி

3 Feb 2026, 4:00 pm
ரயில்  மறியலை வெற்றி பெறச் செய்ய அனைத்து பனியன் சங்க கூட்டம் உறுதி
<p><strong>ரயில் &nbsp;மறியலை வெற்றி பெறச் செய்ய அனைத்து பனியன் சங்க கூட்டம் உறுதி</strong></p> <p>திருப்பூர், பிப்.3- பிப்ரவரி 12ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை &nbsp;நிறுத்தத்தின் போது திருப்பூரில் நடத்தும் ரயில் மறியல் &nbsp;போராட்டத்தை முழு வெற்றி பெறச் செய்வது என்று &nbsp;அனைத்து பனியன் தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு &nbsp;செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்ட அனைத்து பனியன் தொழிற் சங்க முன்னணி ஊழியர்கள் கூட்டம் திருப்பூர் ஊத்துக் குளி சாலையில் உள்ள ஏஐடியுசி தொழிற்சங்க அலுவ லகத்தில் நடைபெற்றது. &nbsp;செவ்வாயன்று பனியன் பேக்டரி லேபர் யூனி யன் ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் பொதுச் செயலா ளர் சேகர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் &nbsp;சிஐடியு பனியன் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலா ளர் சம்பத், தலைவர் கே உன்னி கிருஷ்ணன், எல் பி எப், &nbsp;பனியன் சங்க பொருளாளர் பூபதி எம்எல்எப் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் சக்திவேல் , எச்எம்எஸ் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முத்துசாமி , ஐஎன்டி யுசி சங்கத்தின்மாவட்ட துணைச் செயலாளர் செந்தில் &nbsp;உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் &nbsp;ஒன்றிய அரசின் தொழிலாளர் சட்ட தொகுப்புகளை &nbsp;திரும்பப் பெற வலியுறுத்தியும், விதை மசோதா மின்சார திருத்த மசோதா 2025 திரும்பப்பெற வேண்டும். மகாத்மா &nbsp;காந்தி கிராமப்புற 100 நாள் வேலை சட்டத்தை &nbsp;சிதைக்கும் நடவடிக்கை கைவிட வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க சட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 12ஆம் &nbsp;தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்த போராட்டத்தை திருப்பூரில் வெற்றி பெற செய்வது, &nbsp;அன்றைய தினம் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொள்வது, திருப்பூரில் பனியன் மற்றும் அதனை &nbsp;சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலா ளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை குறித்து &nbsp;எடுத்துரைத்தனர் அடுத்து மேற்கொள்ள வேண்டிய &nbsp;நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப் பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.