தீக்கதிர் விரைவு செய்திகள்
6 Mar 2026, 3:17 pm

மாநிலங்களவைத் தேர்தல் 6 பேரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்!

சென்னை, மார்ச் 6 - தமிழகத்தில் விரைவில் காலியாகவுள்ள மாநிலங்க ளவை உறுப்பினர் பதவிக்கு, திமுக சார்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக், தேமுதிக சார்பில் எல்.கே. சுதீஷ், அதிமுக சார்பில் தம்பிதுரை, பாமக சார்பில் அன்புமணி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த னர். இவர்கள் 6 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ள தாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் மார்ச் 9 என்றாலும், மனுவை ஏற்பதற்குத் தேவையான சட்டமன்ற உறுப்பினர் களின் முன்மொழிவுகள் உள்ளதால், இந்த 6 பேரும் போட்டியின்றி தேர்வாகும் நிலை உள்ளது. அதன்படி மார்ச் 16 அன்று இவர்கள் மாநிலங்களவை உறுப்பினர் களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளனர்.

ஆர்.என். ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றம்

சென்னை, மார்ச் 6 - தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி மாற்றப்பட்டு, மேற்கு வங்க மாநில ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ளார். கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வ நாத் ஆர்லேகருக்கு தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநில ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஆர்.என். ரவி உடனடியாக மேற்குவங்கத்திற்கு மாற்றப்பட்டார்.