வரலாறு காணாத உச்சம்: ரூ. 1 லட்சத்தை கடந்த தங்கம் விலை!
15 Dec 2025, 2:48 pm
<p><strong>வரலாறு காணாத உச்சம்: ரூ. 1 லட்சத்தை கடந்த தங்கம் விலை!</strong></p>
<p>சென்னை, டிச. 15 - சர்வதேச சந்தையின் முக்கிய முதலீட்டு வாய்ப் பாக கருதப்படும் தங்கத் தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதன்படி, திங்கட் கிழமை (டிச. 15) அன்று, ஒரே நாளில் மட்டும் இரண்டு முறை உயர்ந்து, 1 லட்சத்து 210 ரூபாய் என்ற புதிய உச்சத்தை தொட்டிருக் கிறது. காலையில் தங்கம் விலை பவுனுக்கு 740 ரூபாய் உயர்ந்த நிலையில், மாலை யில் மீண்டும் 440 ரூபாய் உயர்ந்திருக்கிறது. அதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை 12 ஆயிரத்து 515 ரூபாயாகவும், 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை 1 லட்சத்து 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளி யின் விலையும் கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி இரு நூற்று பதினைந்து ரூபா ய்க்கு விற்பனை செய்யப் பட்டு வருகிறது. இந்த ஒரு ஆண்டில் மட்டும் வெள்ளியின் விலை 110 சதவிகிதம் உயர்ந்திருக் கிறது.</p>
