கரூர் - வெண்ணமலை பகுதியில் அனைத்துக் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம்
17 Nov 2025, 3:10 pm
<p><strong>கரூர் - வெண்ணமலை பகுதியில் அனைத்துக் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம்</strong></p>
<p>கரூர், நவ. 17- கரூர் மாவட்டம், வெண்ணமலை பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமாக கருதப்படும் இனாம் நிலங்களில் சுமார் 1,200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டு களாக வசித்து வருகிறார்கள். இவர்கள் சிறுக சிறுக சேர்த்து வைத்து வாங்கிய அரசு அங்கீகாரம் பெற்ற நிலம், வீடுகள் மற்றும் கடைகளுடன் கூடிய வீடுகளில் வசித்து வருகின்றனர். வெண்ணமலை முருகன் கோவில் நிலங்களை மீட்பதற்காக திருத்தொண்டர் சபையின் அறங்காவ லர் ராதாகிருஷ்ணன் என்பவர் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கின் வழிகாட்டுதல்களை தவறாக பயன்படுத்தி அறநிலையத்துறை அதிகாரிகள் தற்போது பொதுமக்கள் வீடுகள் மற்றும் கடைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர். அனைத்து கட்சி போராட்டம் தங்கள் உரிமையை நிலை நாட்டுவதற்கான வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதும் உயர்நீதிமன்றத்தின் வழி காட்டுதலை அறநிலையத்துறை தவ றாக பயன்படுத்துவதாக கூறிய பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கொந்த ளித்துள்ளனர். அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைப்பது, மின் இணைப்பை துண்டிப்பது போன்ற பாதகமான செயல்களை வழக்கு முடியும் வரை செய்யக் கூடாது என வலியுறுத்தி இனாம் நில இயக்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாது காப்பு சங்கம் சார்பில் வெண்ணமலை கண்ணம்மாள் வீட்டில் தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சி தானந்தம் கலந்து கொண்டு பேசினார். மேலும் உடனடியாக தமிழக முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையீடு செய்து நிரந்தரமான தீர்வை மக்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க கடிதம் எழுதினார். இதனைத் தொடர்ந்து கரூர் வெண்ண மலையில் அனைத்துக் கட்சிகள் கலந்து கொண்ட போராட்ட ஆலோ சனை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை போராட்ட குழு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் போராட்ட ஒருங்கிணைப்பாளர் காமராஜ் வரவேற்று பேசினார். கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி (காங்கிரஸ்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி, திமுக கரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.கே.வேலுச் சாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் பி.முத்துக்குமார், அதிமுக மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் திங்கட்கிழமையன்று காலை வெண்ணமலை முருகன் கோவில் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்து வது என்று முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் முருகன் கோவில் முன்பு காத்திருப்பு போராட்டம் அனைத்து கட்சிகள் மற்றும் போராட்டக் குழு சார்பில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஜோதிமணி எம்.பி., தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி, திமுக கரூர் வடக்கு ஒன்றிய செய லாளர் வி.கே.வேலுச்சாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் பி.முத்துக்குமார், சிபிஎம் கரூர் மாநகர செயலாளர் தண்ட பாணி, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாநில பொதுச் செயலாளர் ஈசன் முருகசாமி, போராட்ட ஒருங்கி ணைப்பாளர் காமராஜ், அதிமுக மாவட்ட செயலாளர் விஜயபாஸ்கர், காங்கிரஸ் ஸ்டீபன்பாபு, விசிக சுடர் வளவன், வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் சிவா, மாவட்ட தலைவர் சதீஷ், கரூர் மாநகர தலைவர் ராஜேந்திர பிர சாத் உள்ளிட்ட அனைத்து கட்சியின் மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். காலை முதல் மாலை வரை காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது. போராட்டத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் பேசினர்.</p>
