தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உடுமலையுடன் கணக்கம்பாளையம் ஊராட்சியை இணைக்க வலியுறுத்தி அனைத்துக்கட்சியினர் பிரச்சார இயக்கம்

18 Jan 2026, 4:50 pm
உடுமலையுடன் கணக்கம்பாளையம் ஊராட்சியை இணைக்க வலியுறுத்தி அனைத்துக்கட்சியினர் பிரச்சார இயக்கம்
<p><strong>உடுமலையுடன் கணக்கம்பாளையம் ஊராட்சியை இணைக்க வலியுறுத்தி அனைத்துக்கட்சியினர் பிரச்சார இயக்கம்</strong></p> <p>உடுமலை, ஜன.18- உடுமலை நகராட்சியுடன் கணக்கம்பாளையம் ஊராட்சியை இணைக்க வலியுறுத்தி அனைத் துக்கட்சியினர் பிரச்சார இயக்கத் தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், உடு மலைப்பேட்டை வட்டம், கணக்கம் பாளையம் வருவாய் கிராமம் ஒரு &nbsp;பகுதி நகராட்சியாகவும், மற்றொரு &nbsp;பகுதி கிராம ஊராட்சியாகவும் உள் ளது. இந்த கிராம ஊராட்சியில் 5.74 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 32,000க்கும் மேற்பட்ட மக்கள் தொகையும் அடிப்படை வசதிகள் கிடைக்கப்பெறாமல் அவல நிலை யில் வசித்து வருகின்றனர். கிராம &nbsp;ஊராட்சியானது 100க்கும் மேற் பட்ட வீதிகளையும், 60க்கும் மேற் பட்ட வீட்டுமனை பிரிவுகளையும் கொண்ட முழுமையான நகரமாக &nbsp;மாறியுள்ளது. தினசரி பாதுகாக்கப் பட்ட திருமூர்த்தி அணை குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள், பொது சுகாதாரம் முழுமையாக பாதுகாக்கப்படுதல் போன்றவை உடுமலை நகராட்சியு டன் இணைத்தால் மட்டுமே கிடைக் கும். தற்பொழுது கணக்கம்பாளை யம் கிராமத்தில் தான் உடுமலைப் பேட்டை நகராட்சி அலுவலகம், வட் டாச்சியர் மற்றும் கோட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலு வலகம், நீதிமன்றங்கள், அரசு பொது மருத்துவமனை, மாவட்ட வனத்துறை அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிறுவனம், உழவர் சந்தை, அரசு &nbsp;மகளிர் மற்றும் ஆண்கள் மேல் நிலைப்பள்ளிகள், மாணவர் விடுதி கள், தீயணைப்பு நிலையம், சட்ட மன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பி னர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் நிர்வாக வசதிக்காக உடுமலைப்பேட்டை நகராட்சியுடன் இணைப்பதற்கு கருத்துரு அனுப்பியும், திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர் பரிந்துரை செய்தும், நகராட்சி நிர்வாக ஆணையர் பரிந்துரை செய்தும், அரசு இணைப்பதற்கான முயற்சி செய்யாமல் இருப்பது மக்கள் நலனை பாதிக்கும். எனவே, கணக்கம்பாளையம் கிராமத்தின் ஒருபகுதி நகராட்சி யோடு இருக்கும் போது, இன் னொரு பகுதியையும் நகராட்சி யோடு இணைத்து, நகர்ப்புற கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத்தி கணக்கம்பாளையம் கிராம ஊராட்சி மக்களின் நீண்டகால கனவை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அனைத்துக்கட்சி ஒருங்கிணைப்புக்குழு சார்பில் &nbsp;ஞாயிறன்று பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் ஒருங் கிணைப்புக்குழு தலைவர் பாப்பு சாமி, செயலாளர் செல்வராஜ், பொருளாளர் ஜெயபிரகாஷ் உள் ளிட்ட அனைத்துக்கட்சி நிர்வாகி கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இப்பிரச்சாரம் ஜன.22 &nbsp;ஆம் தேதி வரை நடைபெறும் என வும், ஜன.23 ஆம் தேதி உடுமலை &nbsp;நகராட்சி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஒருங்கிணைப்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.