அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
9 Nov 2025, 2:37 pm
<p><strong>அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>நாமக்கல், நவ.9- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சட்டமன் றத் தொகுதியாக கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப் பட்டு இதுவரை சட்டமன்ற தொகுதியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு குமாரபாளையம் தாலுகா புதிதாக அறிவிக்கப்பட்டு தற் போது செயல்பட்டு வருகிறது. குமாரபாளையம் காவல் நிலையம், பள்ளிபாளையம், வெப்படை மற்றும் மொளசி கொக்கராயன் பேட்டை உள்ளிட்ட ஐந்து காவல் நிலையங்களை இணைத்து புதிதாக காவல் உட்கோட்டம் அறிவிக்கப்பட் டுள்ளது. இந்த காவல் உட்கோட்டம் பள்ளி பாளையம் காவல் உட்கோட்டமாக அறிவிக் கப்பட்டு பள்ளிபாளையத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அமைக்க ஏற் பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கு அனைத்து கட்சியினரும் மற்றும் அனைத்து பொதுநல அமைப்பினரும் கண்ட னம் தெரிவித்து, காவல் உட்கோட்ட அலுவல கம் குமாரபாளையத்தில் தான் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பா ளர் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் என அனைவருக்கும் மனு வழங்கினர். இந்நிலையில், தமிழக அரசுக்கு கவன ஈர்ப்பு ஏற்படுத்தும் வகையில் பள்ளிபாளை யம் பிரிவு சாலையில் சனியன்று அனைத்து கட்சியினர் மற்றும் அனைத்து பொதுநல அமைப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். ஆர்.முருகேசன், மாவட்டக் குழு உறுப்பி னர் சக்திவேல், மூத்த தோழர் ஆறுமுகம் மற் றும் அதிமுக, காங்கிரஸ், அதிமுக ஓபிஎஸ் அணி, தேமுதிக, மதிமுக, சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சிக ளும் மற்றும் அனைத்து பொதுநல அமைப்பி னர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் குமாரபாளை யத்தில் வட்டாட்சியர் அலுவலகம் அமைக் கபட்டு பள்ளிபாளையத்தில் காவல் உட் கோட்ட அலுவலகம் வைப்பது கண்டிக்கத் தக்கது. எனவே குமாரபாளையம் பகுதியில் காவல் உட்கோட்ட அலுவலகம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.</p>
