தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாற்றுத் திறனாளிகளுக்காக மதுரையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் மற்றுமொரு சாதனை!

19 Jul 2026, 9:27 pm
மாற்றுத் திறனாளிகளுக்காக மதுரையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் மற்றுமொரு சாதனை!

மாற்றுத் திறனாளிகளுக்காக மதுரையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் மற்றுமொரு சாதனை!

நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பெருமிதம்

மதுரை, ஜூலை 19 - மாற்றுத் திறனாளிகளுக்காக அலிம்கோ நிறுவனத்தின் கிளை அலு வலகத்தை மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்திலேயே அமைப்பதற் கான இடத்தைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிக்கிறது என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கான நலத் திட்டங்களை வழங்குவதில், மதுரை மாவட்டம் தேசிய அளவில் முதன்மை யான பங்களிப்பை வழங்கும் மாவட்ட மாக கடந்த 6 ஆண்டுகளில் உருவெ டுத்துள்ளது.

20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

“மாற்றும் மதுரை” என்னும் பெய ரில், மதுரை மாவட்டத்தில் மாற்றுத் திற னாளிகளுக்கான வாழ்வாதார முகாம்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டன. ஒன்றிய அரசின் சமூக நலன் மற்றும் அதிகாரம் வழங்கல் துறை, மாநில அர சின் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, சமூக நலத்துறை ஆகியவற்றின் திட்டங்களை இணைத்து 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மிக விரிவான முறையில் இம்முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. இம்முகாம்களில் 17,796 பேர் பங்கெடுத்துப் பயனடைந்துள்ளனர். இதுபோக சிறப்புப் பள்ளி மாணவர்கள் 2,500 பேரின் தேவைகளும் இத்து டன் இணைக்கப்பட்டன. மொத்தத்தில் 20,296 பேர் பங்கேற்றுப் பயனடைந்த னர். தமிழகத்தில் இதுவரை நடை பெற்ற முகாம்களிலேயே மிக அதிக மான மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றது மதுரை முகாம்களில் தான்.

2 ஆவது மாவட்டமாக மதுரை...

இந்திய அளவில் பிரதமர் அவர் களின் தொகுதிக்கு அடுத்தபடியாக, அதிகமான பயனாளிகள் பங்கேற்ற இரண்டாவது மாவட்டமாக மதுரை மாறியது அனைவரும் அறிந்ததே. இம்முகாம்களில் அலிம்கோ (ALIMCO) மூலம் செயற்கை உபகர ணங்கள் வழங்கத் தேர்வு செய்யப் பட்டு, அளவீடு செய்யப்பட்டவர் களின் எண்ணிக்கை 2,546 ஆகும். இவர் களுக்குரிய கருவிகளை அலிம்கோ நிறுவனம் தயாரித்துக் கொடுத்தது.

சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த உபகரணங்களை, மாபெரும் முகாம் நடத்தி வழங்கினோம். இந்நிகழ்வில் ஒன்றிய அமைச்சர் பங்கெ டுத்தது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்தமாக 1,562 ஆண்கள், 750 பெண்கள் என 2,312 பயனாளிகளுக்கு 3,987 உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இது தவிர, ரயில் மற்றும் பேருந்து பயணச் சலுகை அட்டை பெற்றவர் கள் 3,043 பேர், இருசக்கர பெட்ரோல் ஸ்கூட்டர் பெற்றவர்கள் 500 பேர், தனித்துவ அடையாள அட்டை (UDID) பெற்றவர்கள் 2,450 பேர், வங்கிக் கடன் மானியம் பெற்றவர்கள் 250 பேர், மோட்டார் பொருத்திய தையல் இயந்தி ரம் பெற்றவர்கள் 226 பேர் எனத் தேர்வு செய்யப்பட்டனர். மொத்தமாக, முகாம்களில் பங்கேற்ற 15,484 மாற்றுத் திறனாளிகளுக்குப் பல்வேறு உதவிகள் கிடைத்துள்ளன. அவர்களுடன் வந்தவர்களையும் கணக்கில் கொண்டால், சுமார் 50 ஆயி ரத்துக்கும் அதிகமானோர் இம்முகாம் களில் பங்கேற்றனர்.

அலிம்கோ நிறுவன கிளை

இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத் திறனாளிகளுக் கான நலத்திட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். மாற்றுத் திற னாளிகளுக்கு உபகரணங்களை வழங் கும் அலிம்கோ நிறுவனம், ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனமா கும். இந்த நிறுவனத்தின் தமிழ்நாட்டிற் கான அலுவலகம் சென்னையில் மட்டுமே இயங்கி வந்தது. மதுரையில் 20,000-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்டங் களைப் பெற்றுக் கொடுத்த பின்னணி யில், இந்த நிறுவனத்தின் கிளை அலு வலகத்தை மதுரையில் அமைக்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கை களை முன்வைத்தோம்.

ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்தும், பல முறை கடிதங்கள் மூலமாகவும் வலி யுறுத்திப் போராடியதன் விளைவாக, அந்த கிளை அலுவலகத்தை மதுரை யில் அமைக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்தது. இதனால், அலிம்கோ நிறுவனத்தின் கிளை தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை யில் அமைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், அதற்கான அலுவலகம் மற்றும் பொருட்கள் வைப்பதற்கான இடம் வழங்கும் பொறுப்பு தமிழ்நாடு அரசாங்கத்திற்கு உரியது.

மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் இதற்கான இடத்தினை ஒதுக்கித் தரக் கோரி தொ டர்ந்து வலியுறுத்தினோம். ‘மதுரை மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு’ கூட்டத் திலும் இதுகுறித்து பலமுறை விவாதித் தோம். மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் இடத்தை ஒதுக்கித் தரக் கோரினோம். ஆனால், மதுரை மாவட்ட நிர்வாகம் வில்லா புரத்தில் ஒரு இடத்தை வழங்கியது. அது மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் இல்லை; பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் இருந்ததால், மாற்றுத் திறனாளிகள் வந்து செல்ல கடும் சிரமம் ஏற்பட்டது. அதன்பின், தமிழகத்தின் அப்போ தைய முதல்வர் தலைமையிலான ‘மாநில வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்’ கடந்த 2024 ஜனவரியில் சென்னையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இது குறித்து கவனத்திற்குக் கொண்டு சென்று, மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் அலுவலகம் தேவை என வலியுறுத்தினேன். அதன் விளைவாக, அப்போதைய தலைமைச் செயலாளர் தலையிட்டு, மாவட்ட நிர்வாகத்திற்கு வழிகாட்டி னார். ஆனாலும் அது நடைமுறைக்கு வரவில்லை.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே இடம் தேர்வு

இந்நிலையில், கடந்த 2026 ஜூலை 3 அன்று நடைபெற்ற ‘மதுரை மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு’ கூட்டத்தில், அலிம்கோ நிறுவனத்தின் கிளை அலு வலகத்திற்கு மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் புதிய இடத்தைத் தேர்வு செய்ய வேண்டு மென முடிவெடுக்கப்பட்டது. அதன் விளைவாக, மாவட்ட ஆட்சி யரும் நானும் நேரில் பார்வையிட்டு இடத்தைத் தேர்வு செய்தோம். அந்த இடத்தில் அலிம்கோ நிறுவனத்திற் கான அலுவலகம் அமைக்க 250 சதுர அடி அறையும், உபகரணங்களை வைக்க 1,200 சதுர அடி கொண்ட அறையும் தற்போது மாவட்ட நிர்வா கத்தால் ஒதுக்கப்பட்டு ஆணை பிறப் பிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட மாற்றுத் திறனாளி களுக்காக கடந்த ஆறு ஆண்டுகளாக நாங்கள் செய்து வரும் தொடர் பணி களில், இது மிக முக்கியமான வெற்றி யாகக் கருதுகிறேன். அலிம்கோ நிறு வனத்தின் கிளை அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளா கத்திலேயே அமைப்பதற்கான இடத் தைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி யையும் மன நிறைவையும் அளிக் கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.