தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆலிஸ்வாக்கர்; ஆணாதிக்கம் நிறவெறி எதிர்ப்பின் சின்னம்!

23 May 2026, 11:48 pm
ஆலிஸ்வாக்கர்; ஆணாதிக்கம் நிறவெறி எதிர்ப்பின் சின்னம்!

ஆலிஸ்வாக்கர்; ஆணாதிக்கம் நிறவெறி எதிர்ப்பின் சின்னம்!

அலிஸ் வாக்கர் ஆப்பிரிக்க அமெரிக்க எழுத்தாளர்களில் தனித்துவமாக விளங்கு பவர்.

ஆணாதிக்கம், நிறவெறி என இரண்டு வகை கொடுமைகளுக்கு ஆளாகும் கறுப் பினப் பெண்களின் துயரம் மற்ற பெண்களின் துயரத்திலிருந்து மாறுபட்டது என்பதால் ஃபெமினிசம் என்ற கருத்தாக்கத்தின் போதா மையை உணர்ந்த அவர், கறுப்பினப் பெண் களின் விடுதலைக்கான கருத்தாக்கமாக, ‘வுமனிசம்’ (womanism) என்ற புதிய சிந்தனையை முன்மொழிந்தார். த

ன்னுடைய கோட்பாட்டை மக்களிடையே எடுத்துச்செல்ல ‘மிஸ்’ என்ற பெண்ணிய இதழை நடத்தினார்.

ஆப்பிரிக்க அமெரிக்க இலக்கியத்தின் முன்னத்தி ஏராகத் திகழ்ந்த ஜோரா நீல் ஹர்ஸ்டன் மீதிருந்த அதீத மரியாதையினால் அவர் படைப்புகள் குறித்த ஆய்வினை மேற் கொண்டு ‘ஜோரா ஹர்ஸ்டனைத் தேடி’ (In Search of Zora Hurston) என்ற கட்டுரை யை வெளியிட்டார்.

களத்தில் இறங்கிய செயற்பாட்டாளர் அலிஸ் வாக்கர் எழுத்தாளராக மட்டு மின்றி களத்தில் இறங்கிப் போராடும் செயற் பாட்டாளராகவும் இருக்கிறார்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இராக் நாட்டின் மீது அநீதி யான போரைத் தொடுத்தபோது போருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மைக்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வந் தார்.

இஸ்ரேலை ‘ஜியானிஸ’ வெறிபிடித்த நாடு என்று கருதிய அவர், உலகின் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட ‘தி கலர் பர்ப்பிள்’ நாவலை ஹூப்ரூ மொழி யில் மொழிபெயர்க்க அனுமதி தரவில்லை.

‘அன்புள்ள ஏவாளுக்கு’ என்ற தலைப்பிட்டு இந்நாவலை அழகு தமிழில் ஷஹிதா மொழி பெயர்த்துள்ளார்.

இராக் போரின்போது அமெரிக்க ராணுவத்தின் அத்துமீறல்களை அம்பலப்படுத்திய செல்சி மேனிங் என்ற பெண் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தார்.

‘அமைதி மற்றும் விடுதலைக் கான சர்வதேசப் பெண்கள் குழு’வின் தீவிர உறுப்பினராக இன்றளவும் செயல்பட்டு வருகிறார்.

நேர்மை, துணிவு, சமரசமின்மையின் வெற்றி அலிஸ் வாக்கரின் தி கலர் பர்ப்பிள் நாவல் காத்திரமான படைப்பாகும்

. தி கலர் பர்ப் பிள் நாவல் 1982இல் வெளிவந்தபோது, மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல விருதுகளையும் வென்றது.

லட்சக்கணக் கான பிரதிகள் விற்றுத்தீர்ந்தன.

அமெரிக் காவில் வெளிவந்த சர்ச்சைக்குரிய நூறு நாவல்களின் வரிசையில் 17ஆவது இடத் தை அந்த நாவல் பிடித்தது.

நாவலில் சித்தரிக் கப்பட்ட பாலியல் காட்சிகள், ஓரினச் சேர்க்கை, கறுப்பின ஆண்கள் இழைத்திடும் குடும்ப வன்முறை ஆகியன குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

விமர்சனங்களையெல்லாம் மீறி நாவல் வெற்றி பெற்றதற்கு, அலிஸ் வாக்கர் தான் சொல்ல விரும்பியதை நேர்மையுடனும், துணிவுடனும் சமரசங்கள் ஏதுமின்றி சொன்னதே காரணமாகும்.

ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் சொல்லொண்ணா துயரத்தைச் சித்தரிக்கும் ‘தி கலர் பர்ப்பிள்’ நாவல் வெறுப்பை விதைக் காமல் அன்பையும், அமைதியையும் மட்டுமே விதைக்கிறது.

கருஞ்சிகப்பும், நீலமும் கலந்த பர்ப்பிள் நிறம் செழிப்பு, வீரம், விவே கம், கம்பீரம், பெருமை, நேர்மை, காதல், அமைதி, புனிதம் எனப் பல மனித மாண்பு களின் அடையாளமாக விளங்கிடும் வண்ண மாகும்.

நாவலின் நாயகி செலி தன் அன்புச் (ஓரினச்சேர்க்கையாளர்) சிநேகிதியுடன் தங்கவிருக்கும் அறையின் பர்ப்பிள் நிறம் கண்டு பூரிப்படைகிறாள்.

ஆம்; பர்ப்பிள் நிறம் காமத்திற்கும் அடையாளமாகும் என்பதால்! நாவலில் செலியின் துயர்மிகு வாழ்க்கை வரலாற்றை அலிஸ்வாக்கர் உன்னத உரை நடைக் காவியமாக வடித்துள்ளார். தனக்கு ஏற்படும் துயரங்களை எல்லாம் பொறுமை, எளிமை, அன்பு, போன்ற அரிய குணங்க ளினால் எதிர்கொண்டு செலி இறுதியில் சகமனிதர்களின் மனதை வென்று காட்டு கிறாள்.

கடவுளுக்கு எழுதிய கடிதங்கள் கடிதங்களின் மூலம் நாவலை சொல் லிச் செல்வது என்ற உத்தியில் (Epistolary Novel) அலிஸ் வாக்கர் பெரும் வெற்றி யை ஈட்டியுள்ளார்.

நாவலில் இருக்கும் மொத் தம் 90 கடிதங்களில் முதல் ஐம்பது கடிதங் கள் நாவலின் நாயகி செலியால் கடவுளுக்கு எழுதப்படுகின்றன என்பது வியப்பிற்குரி யதல்லவா? இந்த ஐம்பது கடிதங்களிலும் செலி தன்னுடைய கையெழுத்தை இடவில் லை.

தன்னை முன்னிலைப்படுத்தாத அவளின் அடக்கம் மட்டுமே அதற்கான கார ணம்.

மீதமிருக்கும் நாற்பது கடிதங்கள் செலி யும் அவளின் பாசமிகு தங்கை நெட்டியும் அவர் களுக்குள் எழுதிக்கொண்ட கடிதங்களாகும்.

நெட்டிக்கு எழுதிய கடிதங்களில் செலி தன்னு டைய கையொப்பத்தை இடுவது அவளது வளர்ச்சி, மற்றும் நம்பிக்கையின் வெளிப் பாடாகும். அனைத்துக் கடிதங்களும் தேதி குறிப்பிடப்படாமலேயே எழுதப்பட்டுள்ளன.

கடிதங்கள் சில ஆண்டுகள் இடைவெளியில் கூட எழுதப்படுகின்றன. எனவே வாசகர்கள் மிகுந்த கவனத்துடனேயே வாசித்திட வேண்டும்.

செலி கடவுளுக்கு எழுதும் கடிதங்கள் எல்லாம் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பேசி டும் கொச்சையான மொழியில் இலக்கண விதிகளை எல்லாம் மீறி எழுதப்படுகின்றன.

இருப்பினும் செலியின் உள்ளத்திலிருந்து புறப்படும் நேர்மையான வார்த்தைகள் என்ப தால் அவற்றில் புனிதத்துவம் மேலிடுகிறது. செலி தன்னுடைய கடிதங்கள் மூலம் கடவு ளிடம் உரையாடுகிறாள்.

பேசும் மொழி யிலான செலியின் இக்கடிதங்களை உரக் கப் படித்திடுவோமேயானால், அவை கவித்து வமாகக் காணப்படுவதை உணரலாம். சில கடிதங்களில் மெல்லிய நகைச்சுவையும் மிளிர் கிறது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தென்அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் வாழ்ந்திடும் கறுப் பின மக்களின் வாழ்வியலை அலிஸ் வாக்கர் மிக அழகான சொற்சித்திரமாகத் தீட்டி யுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.