முந்தய பக்கம்

மாணவர்கள் போராட்டத்திற்கு ஆலியா பட் ஆதரவு

23 Jul 2026, 9:06 pm
மாணவர்கள் போராட்டத்திற்கு  ஆலியா பட் ஆதரவு
<p><strong>மாணவர்கள் போராட்டத்திற்கு ஆலியா பட் ஆதரவு</strong> </p><p>தில்லியில் நடைபெற்று வரும் மாண வர்கள் போராட்டத்திற்கு பாலிவுட் நடிகை ஆலியா பட் ஆதரவு தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் அவர் கூறுகையில், “கடந்த சில நாட்கள் எனது இதயத்தை நொறுக்கிவிட்டன. பின்னர் நம்பிக்கை யுடன் மீண்டும் மீண்டும் சரிசெய்தன. உறு தியுடன் நிற்கும் ஒவ்வொரு மாணவரின் பின்னேயும் ஒரு கனவு உள்ளது. ஒரு குடும்பத்தின் நம்பிக்கை மற்றும் எண் ணற்ற தியாகங்களின் பயணம் உள்ளது. அவர்கள் தங்களை மாத்திரம் பிரதிநிதித் துவப்படுத்தவில்லை, மாறாக தங்க ளுக்குப் பின்னால் வருபவர்களுக்கு சிறந்த பாதையை உருவாக்கும் அதே வேளையில், தங்களை ஆதரித்த அனை வரையும் அவர்கள் பிரதிநிதித்துப்படுத்து கிறார்கள். மாணவர்களின் தைரியம் என்னை வியக்க வைக்கிறது. எதிர்காலம் அவர்களுக்கே. ஜெய் ஹிந்த்” என்று கூறி, ஆதரவு தெரிவித்துள்ளார். முன்னதாக, சல்மான் கான், ஹுமா குரேஷி உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்க ளும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட் டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என் பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram