தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடிப்பழக்கமும் வாய்ப் புற்று நோய் அபாயமும்

10 Jan 2026, 12:25 pm
குடிப்பழக்கமும்  வாய்ப் புற்று நோய் அபாயமும்
<p><strong>குடிப்பழக்கமும் &nbsp;வாய்ப் புற்று நோய் அபாயமும்</strong></p> <p>அளவாக மது குடித்தால் வாய் &nbsp;புற்று நோய் வராது என்ப தில்லை என்று காட்டியுள்ளது மும்பையிலுள்ள டாட்டா நினைவு புற்று நோய் மையம். தினமும் ஒரு சாதாரண அளவு &nbsp;சாராயம் குடித்தால் கூட வாய் சதை புற்று நோய் வரும் அபாயம் ஐம்பது சதவீதம் அதி கரிக்கிறதாம். &nbsp;பீர், விஸ்கி, ஒயின் போன்ற வெளிநாட்டு வகைகளானாலும் சரி மஹுவா, கள் போன்ற &nbsp;உள்நாட்டு வகைகளானாலும் சரி தொண் &nbsp;டைக் குழி புற்று நோய் வரும் அபாயத்தை &nbsp;அதிகரிக்கிறது என்று அந்த ஆய்வு எடுத் &nbsp;துக்காட்டியுள்ளது. புகையிலை போடும் வழக்கமும் சேர்ந்தால் இந்த அபாயம் பன் &nbsp;படங்கு அதிகரிக்கிறது என்று முதன்முறை யாக உறுதி செய்துள்ளது. இந்தியாவில் காணப்படும் புற்று நோய்களில் வாய்ப் புற்று &nbsp;நோய் இரண்டாவதாக உள்ளது. இதனால் &nbsp;ஒவ்வொரு வருடமும் 143,759 புதிய நோயாளி களும் 79,979 இறப்பும் ஏற்படுகின்றன. நோய் &nbsp;பாதித்தவர்களில் பாதிப்பேரே ஐந்து வரு டங்களுக்கு மேல் பிழைக்கின்றனர். &nbsp;2010க்கும் 2021க்கும் இடையில் நடை பெற்ற இந்த ஆய்வில் தொண்டைக்குழி புற்று &nbsp;நோய் பாதிக்கப்பட்ட 1803 நபர்களும் நோய் &nbsp;இல்லாத 1903 நபர்களும் ஒப்பிடப்பட்டனர். பங்கேற்பாளர்களின் மது குடிக்கும் பழக்கம், வகை, எத்தனை தடவை, அளவு ஆகிய விவ ரங்கள் பதிவு செய்யப்பட்டன. மது குடிக்கா தவர்களை விட குடிப்பவர்களுக்கு 68% புற்று &nbsp;நோய் வரும் ஆபத்து உள்ளது என்பது தெரிந் &nbsp;தது. குடியை நெறிப்படுத்தும் கொள்கை ஒன்று &nbsp;வகுப்பதற்கு இதுவே சரியான நேரம் என்கி றார் டாட்டா மையத்தின் இயக்குநர் மருத்து வர் பங்கஜ் சதுர்வேதி. வாய்ப் புற்று நோய் &nbsp;பாதிப்பில் 10% மது அருந்துவதால் வருகிறது. &nbsp;அருணாச்சல பிரதேசம், மேகாலயா, அஸ்ஸாம், தெலுங்கானா, மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இது 15% வரை அதிகரிக்கிறது. மது விலக்கு உள்ள மாநி லங்களில் சாராயம் குடிப்பதனால் வரும் புற்று &nbsp;நோய் குறைவாகவே உள்ளது. &nbsp;மது குடிப்பது குறித்த விழிப்புணர்வும் அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் அவசரமாக எடுப்பது அவசியம் என்கி றார்கள் ஆய்வின் மூத்த ஆசிரியர் மரு. சரயு &nbsp;மாத்ரே மற்றும் கிரேஸ் ஜார்ஜ்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.