தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

18 May 2026, 10:43 pm
திருச்சி விரைவு செய்திகள்

நீதிமன்ற உத்தரவுப்படி ஆலங்குளம் பேரூராட்சி தலைவராக சுதா மீண்டும் பொறுப்பேற்பு

தென்காசி, மே. 18- தென்காசி , ஆலங்குளம் பேரூராட்சி மன்ற 7ஆவது வார்டு கவுன்சிலரான திமுகவைச் சேர்ந்த சுதா என்பவர் ஆலங்குளம் பேரூராட்சி தலைவராக பதவி வகித்தார். இவர், ஆலங்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனக்கு சொந்தமான 8 சொத்துக்களுக்கு கடந்த 2022-23ஆம் ஆண்டு சொத்துவரி, செலுத்தாமல் இருந்துள்ளார். இது தொடர்பாக பேரூராட்சி செயல் அலுவலர் அறிவிப்பாணை வழங்கியும், இவர் சொத்துவரியை செலுத்தவில்லை. 9வது வார்டு கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் என்பவர், சொத்துவரியை உரிய காலத்துக்குள் செலுத்தாத சுதா மோகன்லாலை வார்டு உறுப்பினர் மற்றும் தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுதா மோகன்லாலை 3 மாதத்துக்குள் தகுதி நீக்கம் செய்யவும், அந்த விவரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டதையடுத்து, சொத்துவரியை உரிய காலத்துக்குள் செலுத்த தவறியதால் நீதிமன்ற உத்தரவின்படியும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டப்படியும்,சுதா மோகன்லால் ஆலங்குளம் பேரூராட்சிமன்ற 7வது வார்டு உறுப்பினர் மற்றும் ஆலங்குளம் பேரூராட்சிமன்ற தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து தகுதி இழந்ததாக பேரூராட்சி செயல் அலுவலர் கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சுதா, தென்காசி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து, தீர்ப்பு வரும் வரை சுதா, தலைவர் பதவியில் நீடிப்பார் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அவர் மீண்டும் தலைவராக பொறுப்பேற்றார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சியின் செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திங்கள் நகர்-கருங்கல் நெடுஞ்சாலை, நுள்ளிவிளையில் ரயில்வே பாலம் பணியை விரைந்து முடித்திடுக! முன்னாள் எம்பி ஏ.வி.பெல்லார்மின் கோரிக்கை

நாகர்கோவில்,மே.18- திங்கள் நகர்-கருங்கல் நெடுஞ்சாலை, நுள்ளி விளையில் ரயில்வே பாலம் பணியை விரைந்து முடித்திட கோரி முன்னாள் எம்பி ஏ.வி. பெல்லார்மின் குமரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது, குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளை நாகர்கோவிலு டன் இணைக்கும் பிரதான சாலையான நாகர்கோவில் திங்கள் நகர்-கருங்கல் நெடுஞ்சாலை, நுள்ளி விளை பகுதியில் ரயில்வே பாலம் கட்டப்படுவதற்காக துண்டிக்கப்பட்டு மாதங்கள் ஆகியும். பாலப்பணிகள் துவங்கப்படவில்லை. வாக னங்கள் செல்ல மாற்றுப் பாதையாக திருப்பி விடப்பட்ட பேயன்குழி வடக்கு நுள்ளிவிளை பைபாஸ் தோட்டியோடு சாலைகள், இரட்டைக்கரை கால்வாயின் இருபக்க ஒற்றை வழி சாலைகளாகும். குறுகலான இச்சாலை கள் இருபுறமும் மிகவும் பழு துப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலைமை யில் உள்ளன. பெரும் ஆபத்துக்கள் நிகழும் முன்பு. மேற்படி இருபக்க சாலைக ளையும், நெடுஞ்சாலைத் துறை நிதியின் மூலமோ அல்லது தங்கள் சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் மூலமோ அவசரகதியில் செப்பனிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட நிர்வா கத்திற்கு சாலைப்பணிகளை விரைந்து முடித்திட அறி வுறுத்தல் வழங்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன். எனது தெரிவித்துள்ளார்.

போக்குவரத்தில் ஓய்வு பெற்றோர் பணபலன்களை உடனே வழங்குக! ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கோரிக்கை

நாகர்கோவில்.மே.18- போக்குவரத்தில் ஓய்வு பெற்றோர் பணபலன்களை உடனடி வழங்க ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது அரசு விரைவு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நாகர்கோவில் கிளை நிர்வாகக் குழு கூட்டம் பொன்.சோபனராஜ் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் பகவதியப்பன் நடைபெற்ற வேலைகளை முன்மொழிந்து பேசினார். 62 நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடத்திய பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு கால பண பலன்கள் மார்ச் மாதம் வரை வழங்கப்பட்டது. மார்ச் மாதத்திற்கு முன்பு விருப்ப ஓய்வில் சென்றவர்க ளுக்கும், அதற்குப் பின்னால் பணி ஓய்வு பெற்றவர்களுக்கும் ஓய்வு கால பணபலன்கள் வழங்கப்படவில்லை. ஓய்வு பெற்றவர்கள் அனைவருக்கும் ஓய்வு கால பணபலன்களை உடனடி வழங்க வேண்டும் என்றும், அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மரணமடைந்து விட்டால் அவர்களது குடும்பத்திற்கு அரசு ஊழியர்க ளுக்கும், மின் துறை ஊழியர்களுக்கும் வழங்குவது போல் இறப்பு நிதி வழங்க வேண்டும் என்றும், 2003 க்கு பின்னால் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற தொழிலா ளர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பாளை வங்கி பெண் மேலாளர் கொலையில் மேலும் இருவர் கைது

திருநெல்வேலி, மே 18- பாளையங்கோட்டையில் வங்கி பெண் மேலாளர் கொலையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள சென்னல்பட்டியை - சேர்ந்தவர் பெருமாள். இவ ரது மகள் முத்துமாலை (36). இவர் ஒரு வங்கியில் மேலா ளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி 7 வய தில் ஒரு மகள் உள்ளார். முத்துமாலை தற்போது பாளை தியாகராஜநகரில் தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சனியன்று இரவு அவரை 2 பேர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில், முத்து மாலை க்கு முதல் கணவ ருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்து, 2-ஆவதாக ஆந்திராவை சேர்ந்தவரை திருமணம் செய்ததும், அவருடனும் தகராறு ஏற்படவே தியாகராஜநகரில் குழந்தையுடன் குடியேறி உள்ளார். இதனிடையே அவர் நாங்குநேரி பகுதியை சேர்ந்த 18 வயதான வாலிபருடன் பழகியதால், அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்து உறவினர்கள் கண்டித்துள்ளனர். அவருடன் பேசுவதை கைவிடுமாறு அவரது உடன்பிறந்த சகோதரரான கிருஷ்ணாபுரத்தில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வரும் பன்னீர் செல்வம்(32) கூறியுள்ளார். ஆனால் அவர் கைவிடாததால் தனது சித்தி மகனான நாங்குநேரி ஆழ்வாநேரியை சேர்ந்த இசக்கிப் பாண்டி (35) என்பவரின் திட்டமிட லில் தனது நண்பரான வாகைகுளத்தை சேர்ந்த சிவா(28) என்பவருடன் சேர்ந்து பன்னீர்செல் வம் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய் தேஷ்முக் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனர் விஜயகுமார் மேற்பார்வையில் போலீசார் தனிப்படை அமைத்து ஞாயிற்றுக்கிழமை காலை இந்தக் கொலைக்கு மூளையாக செயல்பட்ட இசக்கி பாண்டியை கைது செய்த நிலையில், மாலையில் பன் னீர்செல்வம், சிவா ஆகி யோரை கைது செய்தனர்

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 3ஆம் நாளாக தாமதமாக இயக்கம்

திருநெல்வேலி, மே 18- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தினமும் மாலை 6 மணிக்கு கன்னியா குமரியில் இருந்து புறப்பட்டு, நெல்லைக்கு இரவு 7.20 மணிக்கு வந்து சேருகிறது. பின்னர் மறுதினம் காலை 6.10 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும். இணை ரயில் வருகை தாமதம் காரணமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் கடந்த 2 தினங்களாக தென்மாவட்டங்களில் தாமதமாக இயக்கப்பட்டது. தொடர்ந்து 3ஆவது நாளாக கன்னி யாகுமரி எக்ஸ்பிரஸ் இணை ரயில் வருகை தாமதம் காரணமாக தாமதமாக புறப்பட்டது. அதாவது அந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, இரவு 8.45 மணிக்கு புறப்பட்டது.நெல்லைக்கு சுமார் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக வந்தது. தென்மாவட்டங்களில் பல ரயில் நிலையங்களில் அந்த ரயிலை எதிர்பார்த்து காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியதோடு, தாமதமாக வந்த ரயிலில் ஏறி சென்னை சென்றனர்.

மே 21: விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தூத்துக்குடி, மே 18- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னைகள், பாசன வசதிகள் மற்றும் வேளாண் சார்ந்த கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு, 2026 மே மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்’ வரும் 21-05-2026 (வியாழக்கிழமை) அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள “முத்து அரங்கத்தில்”நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கோரிக்கை மனுக்களைப் பெற்று விசாரணை நடத்த உள்ளார். மேலும், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப்பணித்துறை (நீர்வரத்து) மற்றும் மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் முதன்மை அதிகாரிகளும் இக்கூட்டத்தில் நேரில் பங்கேற்கின்றனர். எனவே, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயப் பெருமக்கள், உழவர் சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் இக்கூட்டத்தில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு, தங்கள் பகுதி விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகள், பயிர்ச் சாகுபடி தேவைகள் மற்றும் பாசனக் கால்வாய் முறையீடுகள் குறித்த கோரிக்கைகளைத் தெரிவித்துப் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை; மாவட்ட ஆட்சியரிடம் ஆ.ஸ்ரீநாத் எம்எல்ஏ வலியுறுத்தல்

தூத்துக்குடி, மே 18- தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஆ.ஸ்ரீநாத், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜனை திங்களன்று நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜனுக்கு பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்து வழங்கி ஸ்ரீநாத் எம்.எல்.ஏ. தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து, தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு வளர்ச்சித் திட்டங்கள், பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைள், அத்தியாவசியத் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் விரைந்து செயல்படுத்துவது குறித்து ஆட்சியருடன் ஸ்ரீநாத் எம்.எல்.ஏ. ஆலோசனைகளை மேற்கொண்டார்.

வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய சேவைகள் இலவசம் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம்: ஆட்சியர்

தூத்துக்குடி, மே 18- தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் வழங்கப்படும் அனைத்துச் சேவைகளும் முற்றிலும் இலவசமானவை என்றும், பொதுமக்கள் யாரும் இடைத்தரகர்களையோ அல்லது போலி விளம்ப ரங்களையோ நம்பிப் பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் எச்சரித்துள்ளார். இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்கள் மூலமாக மேற்கொள் ளப்படும் வேலைவாய்ப்புப் பதிவு, பதிவு புதுப் பித்தல் (Renewal), வேலைவாய்ப்பற்ற இளைஞர்க ளுக்கான உதவித்தொகை, கூடுதல் தகுதிப் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்தின் வாயிலாக எவ்விதக் கட்டண முமின்றி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.