தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அலமாதியில் சாதிய வன்மத்துடன் ஏழை வீட்டை இடித்த அதிகாரிகள்! நடவடிக்கை எடுக்க விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

25 May 2026, 2:21 am
அலமாதியில் சாதிய வன்மத்துடன்  ஏழை வீட்டை இடித்த அதிகாரிகள்! நடவடிக்கை எடுக்க விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

அலமாதியில் சாதிய வன்மத்துடன் ஏழை வீட்டை இடித்த அதிகாரிகள்! நடவடிக்கை எடுக்க விவசாய தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

திருவள்ளூர், மே 24- திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அலமாதி ஊராட்சியில், சாதிய வன்மத்தோடு செயல்பட்ட அதிகாரி கள் மற்றும் கிராம பெரியவர்கள் போர்வையில் பணம் பறிக்கும் கும்பல் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலா ளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பட்டா கனவோடு வாழும் மக்கள் அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகர், அம்பேத்கர் நகரில் உள்ள அரசுக்கு சொந்தமான மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 30 ஆண்டுக ளுக்கு மேலாக குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

குடிமனை பட்டா கோரி தலைமை செயலகம் நோக்கி நடைபயணம், மாவட்ட ஆட்சியர் மற்றும் பொன்னேரி வட்டாட்சி யரிடம் மனு எனப் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கடந்த 2009-ல், 250 குடும்பங்களுக்கு மட்டும் குடிமனை பட்டாக்கள் வழங்கப் பட்டன.

ஆனால், பெரும்பாலான குடும்பங்களுக்கு இன்னும் குடிமனை பட்டா என்பது கனவாகவே உள்ளது.

தொடர் முயற்சியாகத் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரை கடந்த டிசம்பர் 16 அன்று சந்தித்து மனு கொடுத்த போது, ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வாழ்பவர் களுக்கு பட்டாக்கள் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

ஏற்கெனவே 2006-ஆம் ஆண்டின் 854 வது அரசாணைப்படி மேய்கால் புறம் போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு குடிமனை பட்டாக்கள் வழங்கப்பட்ட நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.

விசாரணை இன்றி இடிக்கப்பட்ட வீடு இந்த சூழலில், சாந்திநகரில் வசிக்கும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஜான்பீட்டர் என்பவர், கடன் பெற்று சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்பில் கல்சுவர் எழுப்பி, சிமெண்ட் ஓடுகள் போட்ட வீடு கட்டியுள்ளார்.

கடந்த இரண்டு மாதமாக கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போதெல் லாம் தடுத்து நிறுத்தாத வருவாய்த் துறையினர் மற்றும் சோழவரம் காவல் துறையினர், வீடு கட்டி முடித்து திறப்பு விழா காணும் தருவாயில், கடந்த மே 20 அன்று திடீரென வந்துள்ளனர்.

எவ்வித விசாரணையும் இன்றி, “இந்த வீடு சுடுகாட்டிற்கு சொந்தமான இடத்தில் உள்ளது” எனக் கூறி வீட்டை ஜேசிபி இயந்திரம் மூலம் முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கினர்.

கட்டிய வீட்டை இடிக்கும் போது பெண்கள், குழந்தைகள் கதறி அழுத நிலையிலும் ஈவு இரக்கமின்றி அதிகாரிகள் வீட்டை இடித்து தள்ளியது பொதுமக்களை கண்கலங்க வைத்துள்ளது.

சாதிய வன்மம் - வசூல் வேட்டைக்கு கண்டனம் இது குறித்து அகில இந்திய விவ சாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அ.து.கோதண்டன் விடுத்துள்ள அறிக்கையில், அலமாதி ஊராட்சியில் கிராம பெரியவர்கள் என்ற பெயரில், பொய்யான புகார்களை கொடுத்து சாதாரண மக்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஒரு கும்பல் ஈடுபட்டு வருகிறது.

ஜான்பீட்டர் கட்டிய வீட்டைச் சுற்றி நான்கு பக்கமும் வீடுகள் உள்ள போது, எப்படி ஒரு வீடு மட்டும் சுடுகாட்டுக்கு சொந்த மான இடம் என்று கூறி விசாரணை இல்லாமல் இடித்தனர்? எந்த விசாரணையும் இன்றி குடி யிருக்கும் வீட்டை இடித்த வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம பெரியவர்கள் என்ற பெயரில் வசூல் வேட்டை நடத்துவ தும், சாதிய வன்மத்தோடு பொய் புகார் கொடுத்த நபர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

கோரிக்கைகள் பாதிக்கப்பட்ட வீட்டின் உரிமையா ளர் ஜான்பீட்டருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

அலமாதி யில் கிராம பெரியவர் என்ற போர்வை யில் பணம் பறிக்கும் செயல்களை உடனடியாகத் தடுக்க வேண்டும்.

ஏற்கனவே உள்ள 10 ஏக்கர் பரப்பளவு சுடுகாட்டை முறைப்படி அளந்து, அதற்குச் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.

மேலும், 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் ஏழை எளிய மக்க ளுக்குத் தமிழக வெற்றிக் கழக அரசு உடனடியாகக் குடிமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.