முந்தய பக்கம்

அழகு முத்துக்கோன் சிலைக்கு மரியாதை

11 Jul 2026, 9:38 pm
அழகு முத்துக்கோன் சிலைக்கு மரியாதை
<p><strong>அழகு முத்துக்கோன் சிலைக்கு மரியாதை</strong></p><p>சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்த நாளையொட்டி, சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது சிலைக்குப் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் ராஜீவ் ஆகியோர் தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி னர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமு, பிற்படுத்தப்பட்டோர் - மிகப் பிற்படுத்தப்பட்டோர் - சிறுபான்மையினர் நலத்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அருண் தம்புராஜ் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram