அல்-பர்காஷ் நிறுவனத்தின் 50-ஆம் ஆண்டு பொன்விழா: பள்ளி, மருத்துவமனைகளுக்கு நலத்திட்ட உதவிகள்!
21 Jul 2026, 12:00 am
<p><strong>அல்-பர்காஷ் நிறுவனத்தின் 50-ஆம் ஆண்டு பொன்விழா: பள்ளி, மருத்துவமனைகளுக்கு நலத்திட்ட உதவிகள்!</strong></p><p>சிதம்பரம், ஜூலை 20– சவுதி அரேபியாவில் முன்னணி நிறுவனமாகச் செயல்பட்டு வரும் 'அல்-பர்காஷ்' நிறுவனத்தின் 50-ஆம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, சிதம்பரத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் இலவச மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக நலப் பணிகள் கோலாகலமாக மேற்கொள்ளப்பட்டன. பொன்விழா நிகழ்வுகளின் தொடக்கமாக, சிதம்பரம் தில்லைக்காளியம்மன் கோவில் வளாகம் மற்றும் இராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளி வளாகங்களில் 500-க்கும் மேற்பட்ட நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து, சிதம்பரம் புறவழிச்சாலை பகுதியில் இயங்கி வரும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி, ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதி யோர் இல்லங்களுக்குத் தேவை யான சுமார் ரூ.2.50 லட்சம் மதிப்பிலான பல்வேறு உதவி உபகரணங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் நேரடியாக வழங்கி கௌரவிக்கப்பட்டன. இதன் முக்கிய நிகழ்வாக, சிதம்பரம் ஜி.எம். வாண்டையார் திருமண மண்டபத்தில் சிறப்பு விழா நடைபெற்றது. சிதம்ப ரத்தைச் சேர்ந்த அல்-பர்காஷ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.எஸ். சபாநாயகம் தலைமை தாங்கி னார். நிறுவனத்தின் மூத்த அலுவலர் சிவக்குமார் அனை வரையும் வரவேற்றுப் பேசினார். விழாவில், சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனைக்குத் தேவையான நவீன மருத்துவ உபகரணங்கள், சிதம்பரம் சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி களுக்கு மாணவர்களின் பயன் பாட்டிற்காகக் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் ஆதரவற்ற பெண்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் வகையில் தையல் இயந்திரங்கள், மாற்றுத் திறனாளிகளுக்குச் சிறப்பு உதவி உபகரணங்கள், சாலையோரச் சிறு வியாபாரிகளுக்குப் பெரிய அளவிலான குடைகள் மற்றும் ஏழை எளிய குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சிறப்பு மருத்துவ முகாம்கள் விழாவையொட்டிப் பொது மக்கள் பயன்பெறும் வகையில், பிரம்மாண்ட இரத்ததான முகாம், தற்காலத்தில் பலருக்கு உள்ள தூக்கமின்மைப் பிரச்ச னைகளைக் கண்டறிந்து ஆலோசனைகள் வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் ஆகியவை நடைபெற்றன. இம்மருத்துவ முகாம்களை சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. தமிமுன் அன்சாரி, புவனகிரி சட்ட மன்ற உறுப்பினர் அருண் மொழித் தேவன் மற்றும் எம்ஆர்கே கல்விக் குழுமத் தலைவர் எம்ஆர்கேபி கதிரவன் ஆகியோர் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினர். முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்பு இந்நிகழ்வில் சென்னை ராதா இன்ஜினியரிங் நிறு வன நிர்வாக இயக்குநர் செந்தில்குமார், அண்ணா மலைப் பல்கலைக்கழக முன்னாள் இயக்குநர் பால சுப்ரமணியன், தொழிலதிபர் முருகேசன், அரசு வழக்கறி ஞர்கள் ஏ.எஸ். வேல்முருகன், ஏ.எஸ். ஞானசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் மூசா, திமுக மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், அதிமுக மாவட்ட நிர்வாகி தோப்பு சுந்தர் உட்படப் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், கல்வி நிறுவன அதிபர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடு களை நிறுவனத்தின் பொது மேலாளர் ஜெகதீஷ் மற்றும் உயர் அலுவலர்கள் சந்தோஷ் பாபு, செல்வம், பழனிவேலா யுதம், கனகசபை, விஜயகுமார், மணிகண்டன், தங்கராசு, விஜய கிரி, அறிவழகன், குருபிரசாத், டாக்டர் கார்த்திகேயன், வெங்க டேசன், மணவாளன் ஆகியோர் செய்திருந்தனர். நிறைவாக, நிறுவன மேலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.</p>
