ஆக்கூரில் சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டன ஆர்ப்பாட்டம்
27 May 2026, 9:21 pm
<p><strong>ஆக்கூரில் சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டன ஆர்ப்பாட்டம்</strong></p><p>மயிலாடுதுறை, மே 27- மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றம், தார் நகரம் போஜ்வாலா வளாகம் கமால் மௌலா மசூதியை சரஸ்வதி கோவில் என சட்ட விரோதமாக அறிவித்துள்ள தீர்ப்பைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், நீதிமன்றங் கள் மூலம் சிறுபான்மை மக்க ளின் வழிபாட்டு உரிமை யைப் பறிக்கும் சங்பரிவார் அமைப்புகளைக் கண்டித் தும் மயிலாடுதுறை மாவட்டம், ஆக்கூரில் தமிழ் நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் கே.பி. மார்க்ஸ் தலைமை வகித் தார். அமைப்பின் மாநில தலைவர்களில் ஒருவரான மூசா கண்டன உரையாற்றி னர். மாவட்ட நிர்வாகிகள் டி. சிம்சன், காபிரியேல், ஆக்கூர் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</p>
