தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெளிமாநில வாக்காளர்களை இறக்குமதி செய்யவே ‘1.27 கோடி இந்துக்கள் நீக்கம்’ என்ற குற்றச்சாட்டு

yesterday
வெளிமாநில வாக்காளர்களை இறக்குமதி செய்யவே ‘1.27 கோடி இந்துக்கள் நீக்கம்’ என்ற குற்றச்சாட்டு
<p><strong>வெளிமாநில வாக்காளர்களை இறக்குமதி செய்யவே ‘1.27 கோடி இந்துக்கள் நீக்கம்’ என்ற குற்றச்சாட்டு</strong></p><p>லக்னோபாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு (2027 - பிப்., அல்லது மார்ச்) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி அம்மாநிலமைச்சர் ஆதித்யநாத்,”1.27 கோடி இந்து வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுள்ளது” என திடீரென குற் றம்சாட்டினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.இந்நிலையில், வெளிமாநில வாக்காளர்களை இறக்குமதி செய்யவே ‘1.27 கோடி இந்துக்கள் நீக்கம்’ என்ற குற்றச்சாட்டை உத்தரப்பிரதேச பாஜக முதலமைச்சர் ஆதித்யநாத் முன்வைத்துள்ளார் என ‘இந்தியா’அணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.</p><p>இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”1.27 கோடி இந்துக் கள் நீக்கம் என்ற குற்றச்சாட்டு சமூகத்தில் அச்சத்தை விதைத்து, தேர் தல் ஆதாயம் தேடும் திட்டமிட்ட சதி ஆகும். மத்தியப் பிரதேசம், ஜார்க் கண்ட், சத்தீஸ்கர், பீகார், இமாச் சலப் பிரதேசம், உத்தரகண்ட் உள் ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆட் களை வரவழைத்தும், போலி வாக் காளர்களாகப் பதிவு செய்தும் உத் தரப்பிரதேச தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. குறிப்பாக உத் தரப்பிரதேச தேர்தலில் இறக்குமதி செய்யப்பட்ட வாக்காளர்கள் மூலம் வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிக்குஉள்ளேயும் வெளியேயும் குளறுபடிகளை ஏற்படுத்த பாஜக சதி செய்ய தீவிரமாக உள்ளது” என அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.&#160;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.