தீக்கதிர் முக்கிய செய்திகள்
14 Jul 2026, 9:11 pm

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்

சோனம் வாங்சுக் அவர்களே, உங்கள் உண்ணா விரதப் போராட்டத்தைக் கைவிடுமாறு நான் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மனிதாபிமானம், சுற்றுச்சூழல் மற்றும் ஜனநாயகத்தின் மீதான உங்கள் அர்ப்பணிப்பு காரணமாக, இந்த உலகிற்கு உங்கள் உயிர் ஈடுஇணையற்றது. பாஜக தனது போக்கை மாற்றிக்கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

கரப்பான் ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே

சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டம் 17ஆவது நாளை எட்டியுள்ளது. அவர் தனது உடல் தசைகளை இழந்து வருகிறார் ; மிகுந்த வலியால் அவதிப்படுகிறார். நான் அவரிடம் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கெஞ்சினேன். அதற்கு அவர் அமைதியாக,”உண்ணாவிரதத்தைக் கைவிடச் சொல்லாதே. ஏன் அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குக் கூட வர மறுக்கிறது என்று அவர்களிடம் கேள்?” என்று பதிலளித்தார்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்

சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற 3ஆம் மொழியின் உள்மதிப்பீட்டுத் தேர்வில் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2027-28 கல்வியாண்டு முதல் 10ஆம் வகுப்பு செல்பவர்கள் பொதுத்தேர்வில் மூன்றாம் மொழித் தேர்வு எழுத தேவையில்லை. அதே போல 3ஆவது மொழிப் பாடத்தை எடுத்துப் படித்தாலும் இந்த ஆண்டு தேர்வு நடைபெறாது.

பாலஸ்தீனிய பத்திரிகையாளர் முகமது மசன்

மனித வரலாற்றின் மிகவும் கொடூரமான காட்சிகளில் ஒன்று கசிந்துள்ளது. காசாவில் உள்ள அனைத்து வீடுகளும் அழிக்கப்பட்டதை இஸ்ரேலிய வீரர் ஒருவர் பெருமையுடன் விவரித்து, ட்ரோன் கேமரா மூலம் அந்த வீடியோவைப் பதிவு செய்துள்ளார். உலகம் ஒருபோதும் மறக்கக்கூடாத தருணம் இது.