தீக்கதிர் முக்கிய செய்திகள்
3 Oct 2026, 9:30 pm

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்

நாட்டில் கல்வி மற்றும் தேர்வு முறைகள் முழுமையாகச் சீரழிந்துவிட்டன. ஏழைகளுக்குச் சுகாதாரப் பாதுகாப்பும் இல்லை, தரமான சிகிச்சையும் இல்லை. புதிய தலைமுறையினர் நேர்மறையான சிந்தனை கொண்டவர்களாகவும் முற்போக்குவாதிகளாகவும் உள்ளனர். இது பாஜக போன்ற பழமைவாதிகளுக்குப் பிடிக்கவில்லை.

திரிணாமுல் காங்கிரஸ் ஐடி விங்

பாஜக ஆளும் மேற்கு வங்க மாநில தலைமைச் செயலகத்தில், பிரதமர் அலுவலகத்தின் மூத்த அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட முயன்ற ஆகாங்ஷா வித்யார்த்தி என்ற பெண் கைது செய்யப்பட்டார். ‘மோடி’ என்ற பெயரே முறைகேடுகளின் அடிப்படை சூத்திரமா?

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம்

ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யாவிட்டால், போராட்டம் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. ஆனாலும் இறுதியில் அவர் ராஜினாமா செய்தே ஆக வேண்டும், வேறு வழியில்லை. ஞானேஷ் குமாரை யார் பாதுகாக்கிறார்கள் என்று தெரியவில்லை. அது மர்மமாக உள்ளது.

ஏஐயுடிஎப் பொதுச்செயலாளர் ரபீக்குல் இஸ்லாத்

பொது சிவில் சட்டம் என்பது பாஜகவின் மறைமுக நிகழ்ச்சி நிரல்களில் ஒன்று. அதனை அவர்கள் வலுக்கட்டாயமாக அமல்படுத்த விரும்புகிறார்கள். பல்வேறு சாதி, சமூகம் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் இணைந்து இணக்கமாக வாழ்வதுதான் இந்தியாவின் அடித்தளமாகும். இதில் மாற்றுக் கருத்து இல்லை.